தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 அக்டோபர், 2012

வாழ்க்கை

வாழ்க்கை

வாழ்க்கையின் வெற்றி என்பது தீர்மானிக்க முடியாதது. ஆனால், வாழ்க்கையின் தோல்வி என்பது தீர்மானிக்கக்கூடியதொன்று. வெற்றியோ தோல்வியோ பிறரைப் பாதிக்கத் தான் செய்கிறது . ஏன் நேரடியாகத் தொடர்பு பட்டவரைக் கூடப் பாதிக்கத் தான் செய்கிறது , அந்தப் பாதிப்பானது ஆரோக்கியமான பாதிப்பாக இருந்தால் நன்மையே! ஆனால் மனித மனமானது ஆரோக்கியமான சிந்தையை நினைப்பது பெரும்பாலும் குறைவே!

எப்போதும் ,எதற்கும் எவரையும் எதிர்பார்க்கக் கூடாது , எதிர்பார்ப்புகள் அனேகமாக ஏமாற்றத்தையே அளிக்கும். உதவி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றே! அதற்காக எதிர்பார்க்கக் கூடாது என்பதே எனது கருத்து, அப்படி என்றால் எப்படி வாழ்வது என்ற கேள்வி எழுவது விளங்குகிறது , அதற்கேற்ப தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியது தான், முக்கியமாக ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன் யாரிடமும் உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்பது தான் என் கருத்தே ஒழிய யாருக்கும் உதவி செய்யக் கூடாது என்பதல்ல.

wrote :peruvaanan bala!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக