தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 அக்டோபர், 2012

விநாயகர் வழிப்பாடு !!!



விநாயகர் வழிப்பாடு இந்து மதத்தில் உள்ள பிரிவுகளை மட்டும் இணைக்க வில்லை இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட பெளத்த,ஜைன மதங்களையும் இணைக்கிறது ஜைன மதத்தில் கணேச பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் புத்த மதத்தில் லாமா பிரிவினரும் மகாயான பிரிவினரும் கணபதியை வழிப்பட்ட பிறகு தான் மற்ற வழிப்பாடே செய்யப்படும் இது மட்டுமல்ல கணபதி கடவுள் என்பவர் ஆணாகவும் இருக்கிறார் பெண்ணாகவும் இருக்கிறார் என்பதை ம
க்களுக்கு விளக்க கணேசாணி என்ற பெயரில் பெண் உருவத்திலும் காட்சி தருகிறார் யாணை முகத்தோடு கூடிய கணேசாணி அன்னையின் திருக்கோலத்தை சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் இன்று கூட நாம் தரிசனம் செய்யலாம்.
நமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன.

விநாயகரை வேதம் அறிந்தவன் வேத முறைப்படி மட்டும் தான் வழிப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் வழிப்படலாம் ஏனென்றால் அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும் கவலை இன்றி அருந்திவிட்டு ஆற்றங்கரை ஓரத்தில் அரசமரத்து நிழலில் அமர்ந்திருக்கும் தொப்பை கணபதி மந்திரங்களுக்கு மட்டும் வசப்படுபவர் அல்ல உண்மை அன்பிற்கு வசப்பட்டு மனிதனின் வாழ்நாள் முழுவதும் துனைவருபவர் ஆவார் அவரை இந்த நல்நாளில் வணங்கினால் சகல தெய்வங்களின் அருளை பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

நமது மதத்துக்குள்ளேயே பங்காளி சண்டை போட்டு பகையாளியாக நிற்கும் தத்துவ மூடர்கள் விநாயகரின் சர்வவியாப நிலையை உணர்ந்து தங்களுக்குள்ள பேதா பேதங்களை மறந்து கைவிட்டு எல்லோரும் சனாதன தர்மத்தின் மைந்தர்கள் என்ற உண்மை நிலையில் நிற்பதற்கு விநாயகர் வழிப்பாடு துணை செய்கிறது எனவே உள் பகையை அழிக்க விநாயகரை வணங்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக