தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 அக்டோபர், 2012

கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள்!!!


கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள்:

பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் கன்னிக் குமரிக்கடல்கொண்ட நாட்டிடையில் என குமரிகண்டத்தை நமது தமிழ் நாடாக விவரித்து வரும் . ஆனல் இந்த குமரிக்கண்ட கொள்கை சில ஆண்டுகளாக அறிவியல் அறிஞர்களால்
மறுக்கப் பட்டு வருகிறது .அதற்க்கு தக்க பதிலும் நமது தமிழ் அறிந்ஞர்களால் இதுவரை ஆதாரபூர்வமாக வழங்கப் படாமல் இருந்து வருகிறது ஆனாலும் இ
துவரையும் எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்தமிழணங்கே என்று "இருந்த " என்ற பழைய புகழையே
பாடிவருகிறோம் நம் தாய் திருநாட்டின் பண்டைய எல்லைகள் தான் என்ன ? என்ற வினாவும் நமதிடையே எழுகின்றது .இதுகுறித்து தகுதியான ஆய்வுகள் இன்னும் சரிவர செய்து நமது தமிழ் அணங்கின் பெரும் புகழ் அதன் சீரிளமை மாறாமல் மீடேடுக்கப் படவேண்டும் என்பது தான் நமது அவா .

சென்ற நூறு ஆண்டுகளாக கடல் கொண்ட தென்னாடு பற்றி தேவநேய பாவாணர் சோமசுந்தர பாரதி ,வி ஜே தம்பிப்பிள்ளை மறைமலை அடிகள் ஏ எஸ் வைதினாதயர் ஜே பெரியநாயகம் ,ஹீராஸ் பாதிரியார் ,அப்பாதுரையார் போன்ற பலரால் சங்க நூல்களில் காணும் கடற்கோள்
செய்திகளையும் குமரிமுனைக்கு தெற்கில் நிலப் பகுதியில் கடற் கோளில் முழுகிய செய்தியை கலித்தொகையும் ,சிலப் பதிகாரமும் காட்டுவதை ஒட்டி பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப் பட்டன .அனால் அதன்பிறகு என்ன காரணங்களாலோ அவைகளிப் பற்றிய ஆய்வுகள் சிறிது சிறுதாக மக்கள் கவனத்தில் இருந்து மறையத்தொடங்கின ..

இந்துமாகடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்து அது கடலில் முழ்கிவிட்டது என ஹேக்களும் வேறு சிலரும் கூறிஅதற்க்கு லெமூரியா என பெயரும் இட்டனர் .அனால் இன்றைய அறிவியலார் ஒருமித்த கருத்து கண்டம் அளவிற்கு பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திலும்கடலுல் முழ்கவில்லை என்கிறது .

ஆயினும் கி மு 8000௦௦௦ ஒட்டி WURM பனியுழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இரநூறு முனூறு மயில் அளவில் கடற்க்கரை பகுதி கடலில் முழுகி விட்டது என்பதை சில கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன ..

ஆனால் சமீபதிதில் சுமதி ராமசாமி என்பவர் அறிவியலார் ஒருமித்த கருத்து கண்டம் அளவிற்கு பெரிய நிலப் பரப்பு எதுவும் எந்தக் காலத்திளும்கடளுள் முழ்கவில்லை எனக் கூறியதை சாக்காக வைத்து FABULOUS GEOGRAPHERS CATASTROHIC HISTORIES : THE LOST LEMURIA என்ற தமது நூலில் கடல் கொண்ட தென்னாடு பற்றி அதுவரை எழுதிய அறிஞர்களை கேலிப் பேசி விமர்சனம் செய்துள்ளார் .அந்த குமரிக் கண்ட கொள்கையே தவறு என்கிறார் . ஆனல் கலித்தொகை சிலப் பதிகாரம் முதலியவை குறிப்பிடுபவை பற்றி அவர் எந்தவித சமாதானமும் கூறவில்லை . ஒரு கண்டம் அளவிற்கு அழிவுகள் ஏற்படாவிட்டாலும் இந்துமாக் கடலில் இருந்த தீவுகள் மூலமாக ஆபிரிக்காவையும் தென்நிந்தியாவையையும் இணைத்த வால் போன்ற வழி வழியாகத்தான் நமது ஆதி குடி விருமாண்டி வந்திருக்கக் கூடும் என நினைக்கிறன் .இவை கி மு 8000௦௦௦ ஒட்டி WURM பனியுழி இறுதியில் கடல் மட்டம் உயர்ந்து உலகெங்கும் ஏறத்தாழ இரநூறு முனூறு மயில் அளவில் கடற்க்கரை மறந்த போது நமது தென்னிந்தியாவும் துண்டிக்கப் பட்டிருக்க வேண்டும் . இவையே சங்க நூல்களிலும் குறிப்பிட்டுக்கப் பட்டிருக்கும் என நினைக்கிறன் .

ஆனல் இதனையும் ஆராய்ச்சியில் தான் உள்ளதே தவிர தீவிர ஆய்வுகள் ஏனோ செய்யப்படவே இல்லை . சுமதி ராமசாமி எழுதிய FABULOUS GEOGRAPHERS CATASTROHIC HISTORIES : THE LOST LEMURIA என்ற நூலுக்கும் சரிவர மறு மொழி அளிக்கப் படவில்லை .

இந்த நிலையில் ஒரிசா வில் வசிக்கும் மின்தமிழ் உறுப்பினர் பால சுப்ரமணியம் என்பவர் ஒரிசாவில் இருந்து கொண்டு கலிங்கர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் சரித்திரத்தில் உள்ள தொடர்புகள் பற்றி பல சான்றுகளை நேரில் சென்று ஆய்ந்து அவைகளை ஆவணப் படுத்தி வருகிறார் kalinga _ tamil என்ற பெயரில் பல ஆண்டுகளாக தனது ஆய்வின் தரவுகளை வழங்கிவருகிறார் .எனக்கு மின்தமிழ் மூலம் பழக்கம் ஆனார் .
அவர் கலிங்கர்களுக்கும் தமிழ் நாட்டு வரலாறுக்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து நீண்ட ஒரு ஆய்வு பெரும் பாலும் அவரது சொந்த செலவிலேயே செய்து வந்திருக்கிறார் .

சமீபத்தில் சென்னையில் ஆதிச்சநல்லூர்ச சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும் ' என்ற பொருளில் நடந்த தேசிய கருத்தரங்கத்தில் பாலசுப்ரமணியன் அவர்கள் கடலில் முழ்கிய சங்ககால தமிழக பகுதிகள் என்ற பொருளில் ஒரு கருத்துரை வழங்கினார் .அவர் கடந்த இருவருடங்களாக கடலில் மறைந்த தென்னாடு குறித்து நேரடியான களப் பணிகள் மூலம் பல தரவுகளை திரட்டயுள்ளர் .
அவர் இந்தக் கருத்தரங்கத்தில் படித்த ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை தமிழில் அளிக்கிறேன் .

கருத்துரை பொறி பாலசுப்ரமணியன் தலைப்பு : கடலில் முழ்கிய சங்ககால தமிழக பகுதிகள் ( சுருக்கம் ) பூமி உருவானதில் இருந்து இந்தக் காலம் வரை நிலமும் பூமியும் தங்கள் பரப்பை அதிகரித்துக் கொள்ள போரிடுவது போல் தோன்றுகிறது .போரில் இதுவரை யாரும் வெற்றி தோல்வி அடையவில்லை .சில இடங்களில் நிலம் வென்றுள்ளது .சில இடங்களில் நீர் வென்றுள்ளது .
ஆனால் ப்துவாக தற்ப்போது நிலமே அதிக வெற்றி அடைந்து வருவதாக தோன்றுகிறது . நமக்கு முனமே தெரியும் நமது சரித்திர சான்றுகள் பல பல இன்னும் நமது கடற்கரைகளில்தண்ணீருக்குள் முழ்கி பல ஆண்டுகளாக நமது ஆய்வை நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றன . உதாரணமாக போம்ம்புகார் மாமல்ல புறம் ,தரங்கம் பாடி ,கொற்கை ,கயல் பட்டினம்,திருவெண்காடு நாகப் பட்டினம் ,வேதாரன்யம் ,மிமிச்சல் உவரி மற்றும் முட்டம் முதலிவை.பல சங்கப் பாடல்கள் நிலா அதிர்ச்சி குறித்தும் , கடல்கள் எல்லை மீறுவது குறித்தும் பொதுவாக பாடுகின்றன .

நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும் இலங்கு திரை பெருங்கடல் எல்லை தோன்றினும் ---குரின்தொகை 373 பெருநிலங்க்க்கிளரினும் நற்றிணை 201 நிலம் புடை பெயர்வதாயினும் ( நற்றிணை 9) முதலியவரிகள் நிலா அதிர்வுபற்றியும் நிலம் அழிந்து ஏழை ஆவது குஇத்தும் பேசுகின்றன தமிழ் நாடு கடற்க்கரை 1076 km தூரம் பதிமூன்று மாவட்டம் 591 மீனவ கிராமங்கள் ஆய்வுக்கு உரியவை .

எனது ஆய்வு முறை முதலில் தமிழ் நாட்டின் கடற்கரை கிராமங்களில் நேரில் சென்று அங்கு பாரம்பரியமாக வாழும் மீனவ சமூகத்திடம் உள்ள செய்திகளை அவர்கள் கடலுக்குள் சென்றபோது கண்ட அனுபவங்கள் ,அவர்களுக்கு அவர்களின் முன்னோர்கள்ளல் கடலைப்பற்றி கூறப் பட்ட செய்திகள் ,அவர்களின் நம்பிக்கை ,கலாச்சாரம் பற்றிய செய்திகளை தொகுத்து அதில் இருந்து தரவுகளை பெறுவது .பிறகு அந்த ஊர்களைப் பற்றி சங்க பாடல்களில் உள்ள குறிப்புகள் அறிவியல் அறிஞர்கள் மூலம் ,தமிழ் அறிஞர்கள் மூலம் தரவுகள் பெறுவது .

பிறகு hydrographers, occeanographers,
geologist marine biologists போற்ற அறிவியல் அறிஞர்கள் மூலம் கடலை ஆய்யு செய்வது போன்ற முறையில் அமைந்ததாகும் .
அநீகமாக ஒரிசாவில் இருந்து தமிழ் நாட்டில் இருக்கும் அணைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று ஆய்வுகள் ,செய்திகள் திரட்டி ருக்கிறேன் .

கன்யா குமரியில் செய்த ஆய்வுகளில் இதுவரை இரண்டு பழைய கற்க்காலத்தை சேர்ந்த ஆய்வு இடங்கள்கண்டறியப் பட்டுள்ளது .
இந்து மாக சமுத்திரத்தின் அருகே மைலாடி மருந்து வாழ மலை ,தூத்தூர் என மூன்று புதிய கற்க்காலத்தை ஆய்விடங்கள் கண்டறியப் பட்டுள்ளது .இவைகளும் ஆற்றங்கரை ஒட்டியே அமைதுள்ளது . இவைகளும் முது மக்கள் தாழி கிடைத்துள்ளது .இவை இன்னும் விரிவான ஆய்வுக்கு உரியவை .

நான் நீண்ட நாட்களாக தேடி வந்த ஒர்ரிசாவின் நோலியாஸ் என்கிற பழங் குடிகளின் தொடர்பு கன்யா குமரியில் உள்ள தேங்காய் பட்டினம் அருகே ள்ள நுலயாஸ் என்ற பழங்குடிகளை கண்டபோது முடிந்தது .கண்ணிய குமரியில் வாழும் ஒரு பூர்வ குடியில் தொடர்பு ஒர்ரிசாவில் கிடைப் பது விந்தை இல்லையா ?
இவர் அங்கு போனாரா ? அவர் இங்கு வந்தாரா ? இன்னும் ஆய்யுவுக்கிரியது .இதை ஆய்தால் கூடவே பல சரித்திரக் கொடிகள் இந்த குடியின் பின்னாலேயே வரும் . மேலும் அந்த கரைகளில் வாழும் மீனவர்களிடன் சங்க காலத்தில் கூறப் படும் பாரம்பரியா தொல்லியல் ஞானம் நெய்தல் பற்றி அவர்களிடம் இன்னும் தங்கி உள்ளது. இவைகளும் ஆய்ய்வுக்கு உரியவையே .சங்கு குளிக்கும் முறை ,சுறா வேட்டை இன்னும் பல .

ஆபிரகாம் பண்டிதர் 1917 இல் வெளயிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூலில் ,1883 இல் வந்த ஒரு கடல் கோள்களில் கன்யா குமரிக்கு அருகில் ஒரு புதைந்த கோயில் தெளிவாக தெரிந்ததாக கூறயுள்ளார் இதுவும் ஆய்யுக்கு உரியது .

தமிழ் நாட்டின் மணல் முட்டுகள் தேரிகள் ,சதுப்பு நிலங்கள் முதல்யவை ஆய்வுக்கு உரிய இடங்கள் உதாரணம் பழவேர்க்கடடு , பட்டினப் பக்கம் ,கோவளம் ,களிவெளி மரக்காணம் , பிச்சாவரம் ,பழையாறை கொள்ளிடன் ,முத்துபேட்டை பரங்கிப்பேட்டை ,மன்னர் வலை குடா ,புன்னை காயல் மனப் பாடு ராஜாக்க மங்களம் குளச்சல் ,தேங்காய் பட்டினம் கலிங்க ராஜா பட்டினம் தூத்தூர் ,நீரோடி முதலியவை அதன் இயற்க்கை இருப்பிடம் மூலம் அதில் புதைந்துள்ள வரலாறு செய்ய்திகளை தெரிவிக்கிறது . எந்த ஒரு வரலாறு ஆய்வு தளம் காணும் போதும் அதை சுற்றி உள்ள ஊர்களின் பெயரும் பெரும்பாலும் சரித்திரப் பெயர்களாகவே அமையும் .

உதாரணமாக கன்யா குமரியில் குரும்பணி நாடு என்ற பெயரையும் ,மரக்காணம் பகுதியில் இடைக்கழி நாடு என்ற பெயரையும் நான் கண்ட சரித்திர ஆய்வுத்தலங்களின் அருகே கண்டேன் .

நான் கண்ட வரை கன்னியாகுமரி மீனவர்களிடம் பேசி பெற்ற தரவுகள் மூலமும் கன்யா முறை மாவட்டத்தின் தேங்காய் பட்டினமும தூத்துக் குடி மாவட்டம் தாமிரவருணி பகுதியும் கடலால் சூழப் பட்ட பகுதியாகும் .மேலும் முழ்கி இருக்கும் பல பகுதிகளில் மீன்கள் பெருவாரியாக கிடக்கின்றது இவைகள் wadge பேங்க் பகுதிகள் எனப் படுகின்றன .
மீனவ்வர்களும் பனை ஓடுகள் மற்ற கட்டுமான பகுதிகளும் அங்கு தெரிவதாக இன்னும் கூறுகின்றனர் .

நிச்சயமாக கன்யா குமரியின் கடற்கரை மீனா கிராமங்களில் குமரிக்கண்ட எச்சங்கள் மிகுதியாக நிச்சயம் கிடைக்கும் என எனது முதல் நிலை ஆய்ய்வுகள் அறுதி செய்கின்றன .
மேலும் கலிங்க ராஜா பட்டினம் என்ற ஒரு ஊரும் கடலில் கடு எடுக்கப் பட்டயுள்ளது . நான் கலிங்க தொடர்புகளை தேடி தமிழ் நாடு வரும் போது கலிங்க தொடர்புடைய கலிங்க ராஜா பட்டினம் என்ற ஒரு ஊர் கிடைத்துள்ளது . அந்த கலிங்க ராஜன் யார் என்பது ஆய்ந்து உறுதி செய்யப் பட வேண்டும் .
நான் பெரும் பாலும் எனது ஆய்வுகளை எனது சொந்த செலவிலும் ,சில புரவலர்களின் துணையுடன்தான் செய்து வருகிறேன் .
எனக்கு occeangraphic ,sona meter ,under ewater communication remote control ,gps முதலயதெந்த தன்னார்வ உதவிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும் .

நன்றி -ஏ சுகுமாரன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக