தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மார்ச், 2012

சைனஸைட்டீஸ் -Sinusitis !!


செவ்வாய் தோறும் சிம்பிள் சைன்ஸ் - பாகம் - 8 - Sinusitis

போன வாரம் நாம் பார்த்தோம் சைனஸ் என்றால் என்ன இந்த சைனஸ் எப்படி மனிதர்களுக்கு பிரச்சினை கொடுக்கும் என்று. இந்த வாரம் நாம் சைனஸைட்டீஸ் பற்றி பார்க்கபோகிறோம். போன வாரமே கூறியிருந்தேன் சைனஸ் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு இயற்கை ஃபில்டர். இந்த சைனஸை நாம் சரியாக கவனிக்காதபட்சத்தில் அது சைனஸைட்டீஸாக மாறும். சைனஸைட்டீஸ் என்றால் இன்ஃபெக்ஷன் என்று பொருள். ஆம் உங்கள் சைனஸ் பாக்டீரியாவால் பாதிக்கபட்டு டாக்டர்கள் அக்யூட் சைனஸைட்டீஸ் என கூறுவர்.

இந்த சைனஸைட்டீஸ் மொத்தம் மூன்று வகைப்படும். அக்யூட் சைனஸைட்டீஸ் நான்கு வாரங்களுக்கு மேல் இருக்காது. அடுத்து செமி அக்யூட் சைனஸைட்டீஸ் என்பது 4லிருந்து 8 - 12 வாரம் இருக்கும் இதுவும் டெம்ப்ரவரி பிரச்சினைதான். க்ரோனிக் சைனஸைட்டீஸ் என்பது தான் மோசமானது சுமார் 12 வாரத்திர்க்கு மேல் இருக்கும் இந்த க்ரோனிக் தான் மிக ஆபத்தானது. சிலருக்கு வருடத்தில் நான்கு முறை அக்யூட் அல்ல்து செமி அக்யூட் சைனஸைட்டீஸ் வந்தால் கூட நிலைமை கஷ்டம் தான். அக்யூட் சைனஸைட்டீஸ் நார்மலாக கெட்ட பேக்டீரியாவின் மூலம் வரும் மூச்சு விட கஷ்டமாக இருக்கும் மற்றும் தலைவலி வரும். ஆனால் குரோனிக் சைனஸைட்டீஸ் வந்தால் மூஞ்சி முழுவது வீங்கிவிடும் அல்ல்து கண்களுக்கு கீழே மற்றும் கண்ணங்களில் வீக்கம் பேக்ட்ரீயா இன்ஃபெக்ஷன் மற்றும் ஃபங்கஸ் ஃபார்மாயிருக்கும்.

சைனஸைட்டீஸ் 5 - 7 நாளுக்கு மேல் கோல்டு பிடித்திருந்தால் இது கண்டிப்பாக சைனஸைட்டீஸ்தான். இதனால் ஒரு வித கெட்ட நற்றம் மூக்கில் மற்றும் வாயிலிருந்து வரும், முகர்ந்து பார்க்கும் திறன் முற்றிலும் பாதிக்கப்டும், இருமல் (இரவில் மோசமாகும்), ஒருவித டயர்ட்னஸ் இருந்துகொண்டே இருக்கும், ஜுரம், தலைவலி, பல்வலி, முகத்தின் உள் வழி, கண்களுக்குள் வலி, முக்கடைப்பு, சளி, தொண்டை வலி மற்றும் மூச்சு விட ச்ர்மப்படுதல் கட்டி சளி மற்றும் ஒரு வித பிரவுன் வண்ணத்தில் வரும்..... இதெல்லாம் தான் அறிகுறி. சிலருக்கு சாய்ந்து ப்டுத்தால் தலைவலி அதிகமாகும். தலையில் துணியை இருக்க கட்டி கொண்டு கொஞ்சம் நாளில் எவ்வளவு இருக்கினாலும் வலி நிற்காது. சிலர் மூகத்தில் மசாஜ் செய்வார்கள் வலி மாறிகொண்டே இருக்கும் ஏன் என்றால் அதில் அந்த ஃப்லுயிட் உள்ளுக்குள் ஓடும்.சாதாராண் எக்ஸ்ரேயில் இந்த சைனஸைட்டீஸ் ஏமாற்றும், என்டோஸ்கோபி அல்ல்து ரினோஸ்க்ப்பி - இது ஃபைபராப்டிக் ஸ்கோப் மூலாம் பரிசோதித்தால் தான் தெரியும் உங்களுக்கு எந்த மாதிரி சைனஸைட்டீஸ் இன்ஃபெக்ஷன் என்று. இதை நீங்கள் டாக்டர் சீட்டு இல்லாமல் லேபில் டெஸ்ட் செய்தால் சுமார் 35% சீப். அந்த ரிப்போர்ட்டை எடுத்து பின்பு டாக்டரிடம் காண்பிக்கலாம்.

இதன் டெம்பரவரி நிவாரனம் - மூகத்தில் ஒரு வெள்ளை காட்டன் துணியில் வெண்ணீரில் நனைத்து முகத்தில் மாற்றி ஒரு இரண்டு நாளாவ்து போடுங்கள். நிறைய பாணங்கள் ஐஸ் இல்லாமல் அருந்தினால் மூக்கஸ் தின்னாகும். முடிந்தால் ஆவி பிடிக்கலாம் தினமும் நான்கு முறை - தயவு செய்து விக்ஸ், அமிர்தாஞ்சன் போட்டு பிடிக்க வேண்டாம் - நன்றாக இரூக்கும் ஆனால் உடம்புக்கு நல்லதல்ல. தெருவில் கிடைக்கும் " நொச்சி இலை" அல்ல்து ஈகுலப்டீஸ் தைலம் தான் பெஸ்ட். ஹிமிடியுஃபைர் ஒன்றை வாங்கி உங்கள் ரூமிலும் காரிலும் கண்டிப்பாக வைக்க வேண்டும். சைனஸைட்டீஸ் ஒரு தொல்லை வாழ்க்கையை கெடுக்கும் ஒரு சைலன்ட் கில்லர். நல்ல பழங்கள், காய்கறிகள், வியர்க்கும் அளவு உடற்பயிற்ச்சி மற்றூம் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை தான் சைனஸைட்டீஸ் வராமல் தடுக்க வழி.

கடைசி டிப்ஸ் - போன வாரம் ஒருவர் என்னிடம் இன்பாக்ஸில் கேட்டிருந்தார் சைனஸ் இருந்தால் முகம் அழகாக இருக்கும் என்று எப்படி கூறமுடியும் என்று இது நூறு சதவிகிதம் உண்மை. ஸ்பீனாய்டு சைனஸ் என்ற் ஒரு விஷயம் 13 வயதில் இருந்து தான் வரும் அப்போது பாருங்கள் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் ஒரு வித மினிமினுப்புடன் மிக அழகாக காணப்ப்டுவார்கள். அவர்கள் எவ்வளவு அழ்காக மாறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது இது போக பிரன்டல் போர்ஹெட் சைனஸ் என்பது 7 வயதில் இருந்து வரும் ஒரு சைனஸ் அப்போது தான் ஹை சீக்ஸ் என கண்ணத்தில் இரு பிரிவு ஏற்பட்டு சப்பி சீக்ஸ் போய் சீக்ஸ் சிக்க்னு இருக்கும் என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக