உண்ணாமுலை உமையாளொடும்
உடனாகிய ஒருவன்....
பெண்ணாகிய பெருமான் மலை
திருமாமணி திகழ......
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவு அதிரும்.......
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ணம் அறுமே.
திருஞானசம்பந்தப்பெருமான்..
உண்ணாமுலை என்னும் திருநாமம் தாங்கிய உமை அன்னையுடன் உறைகின்ற ஒப்பற்றவனாகிய ஈசன்.....
உமை அன்னையை தன் இடப்பாகத்தில் ஏற்று பெண் ஆயினான் ........
அப்பெருமானுடைய மலையாகிய திருவண்ணாமலை செல்வம் மிக்க மணிகளை கொண்டு உள்ளது ......
அம்மலையிலிருந்து மண்ணில் பொருந்த வீழும் அருவியானது இள முழுவின் ஓசையை தருகிறது.....
அத்தகைய அண்ணாமலை அண்ணலை தொழுபவர்களுக்கு அவர்கள் செய்த வினை முழுவதும் அறுந்து விழும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக