சிங்களத்தேசியம் என்பது வரலாற்று ரீதியாக தமிழ் தேசியத்தில் இருந்து பெருத்த மாறுபாடுடையதாகும் தமிழ் தேசிய்வாதிகள் சங்கிலியன், பண்டாரவன்னியன் கைலாயவன்னியன் போன்ற யாழ்பாண மற்றம் வன்னிசிற்றரசர்களையே சுதந்திரவீரர்;களாக கருதினர். வடக்கு வெளியே பிரிட்டிஸ்; உட்பட அன்னியர் ஆட்சியை எதிர்த்து பேரிட்டவர்கள். அவர்கள் அறியமாட்டார்கள் கௌரவம்தரமாட்டார்கள் பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்துபோரடிய கெப்பிட்டிப்பொல, கொங்கலகொடபண்டா, புரான் அப்பு வென்குடப்பொல, வென்வேரிப்யப்பொல், அமங்கலதேரோ, போன்ற புரட்சியாளர்களைக்கண்டு பெருமைப்படமாட்டார்கள் அவர்களுக்கு சிங்களவர் என்ற அடையாளம் மட்டுமே தரப்பட்டது. கண்டியின் கடைசிமன்னன் சிறிவிக்கிரம்ராஜ சிங்கன் என அழைக்கப்படும். கண்ணுச்சாமியை தமிழ் தேசியவாதிகள் கண்டிய சிங்களவர்களை அடக்கி ஆண்ட தமிழன் என்ற தமிழ் இனவாதப்பெருமையால மட்டுமே போற்றினார்கள் அப்போது கண்டியில் அரசாங்கமொழியாகத் தமிழ் இருந்தது. கண்டி இராச்சியம் பிரிட்டிஸ்காரரிடம் வீழ்ச்சிசயடைந்தபோது கண்டியரசன் உட்பட சிங்களப்பிரதானிகள் பிரிட்டிஸ் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்ற செய்தியை தமிழ் அரசுக்கட்சிகாரர்கள் சொலிப் பெருமைப் படாதமேடைகிடையாது. சிறவிக்கிரமராஜ சிங்கன் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராகப் போரடிய வரலாற்றை இவர்கள் பெருமைப்படுத்துவது இல்லை மாறாக தமிழன் கண்டியில் சிங்களவனை ஆண்டான் என்றே பெருமை பேசினர்.
இலங்கைவரலாற்றில் பிரிட்டிஸ் அரசை எதிர்த்த சிங்கள, முஸ்ஸிம் புரட்சி யாளர்களைப் பொருட்படுத்தாத தமிழ் தேசியவாதிகள் வீரபாண்டியகட்டப்பொம்மனை மருதுபாண்டியர்களை சினிமா ஊடாகத்தெரிந்து கொண்டு போற்றினார்கள் ஆனால் புரான் அப்புவையும் கெப்பிடிப்பெபொலவையும் அவர்கட்கு தெரியாது. சுபாஸ்சந்திரபோஸையும் மகாத்மாகந்தியையும் போற்றிய இலங்கையின் சுத தெரிந்தமட்டத்துக்கு கொல்வின் அர்.டி சில்வா.என்.மெ.பெரெரா லெஸ்லிகுணவர்த்தனவை தெரியாது. தமிழ் இனவாதிகள் சிங்களவரால் ஆளப்படுவதைவிட பிரிட்டிஸ்சால் ஆளப்படுவதை விரும்பினார்கள் என்பதே உண்மை, இலங்கை தழுவிய உணர்வு, இலங்கைமக்கள் என்ற உணர்வு சிங்கள முஸ்ஸிம் மக்களிடம் நிலவிய அளவுக்கு ஏன் இலங்கை பறங்கியரிகளிடம் நிலவிய மாதிரி இலங்கையர் எந்த எண்ணம் தமிழ் நடுத்தரவர்த்திடம் நிலவவில்லை 1948 இல் இலங்கை சுதந்திரத்தின் பின்பு கண்டியின் கடைசி அரசன் சறிவிக்கிரமராஜசிங்கனின் சிங்கக் கொடியே இலங்கைகொடியக ஏற்கப்பட்டது. இந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழவில் இருந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழுவில் இருந்த செனட்டர்நடேசன் தமிழ் மன்னனின் கொடி இலங்கை கொடிஙாக ஏற்கப்படுவது இலங்கையுpன் இன ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும் எனக்கூறினர். சிறவிக்கிரம் ராஜ சிங்கன் தமின் என்று கொண்டாடியோர் அவன் கொடியை சிங்களவர் கொடி என்றனர். உண்மையில் சிறிவிக்கிரமராஜசிங்கன் தமிழனாக்ககருதப்பட்டாலும் மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தொலுங்க ராவான் அவனை இலங்கை வரலாற்றில் தமிழனாக்கிவிடார்கள்.
by Dr.Dr. Moorthy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக