வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்
எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்..
இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக