தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 மார்ச், 2012

கவுண்டமணி


நடிகர்  கவுண்டமணி யின் அவர்களின் உண்மையான பெயர் என்ன ?

அவர் இயற் பெயர் மணி ,அவர் நடித்த நாடகமொன்றில் "ஊர் கவுண்டர்" என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார்.

வாழ்க்கை குறிப்பு:
நடிகர் கவுண்டமணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் கிராமத்தில் 1950-ல் பிறந்தார்.
அவர் தந்தை பெயர் கருப்பையன்
தயார் பெயர் அன்னம்,
மனைவி பெயர் சாந்தி ,
அவருக்கு செல்வி & சுனிதா இரண்டு பெண் குழந்தைகள்.

அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர் பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது

பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

இவர் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக