ஈழ வம்சம்
13 ),, ஈழ வம்ச பூர்வீக அரசை வீழ்ச்சி காண வைக்க சோரம் போன சொந்தங்கள் ,,,,,,,,,,,,,
ஆரியனில் தொடக்கி அயல் நாட்டு அரசுகளும் ஐரோப்பிய படை எடுப்பாளர்களும் எமது வம்சத்தை அழிப்பதற்கு எமதுஇரத்த உறவுகளையே பயன்படுத்தினார்கள் என்பது வெளிப்படை! .அதையே இறுதியில் சிங்களவனும் முள்ளி வாய்கால் முடிவில் நிதர்சனமாக்கினான் ..தமிழன் வீரத்தை எதிர்த்து வெல்ல இன்னொரு தமிழன் உதவி இல்லாமல் எந்த ஒரு ஆதிக்க சக்தியாலும் முடியாது என்பது பூர்வீக காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்த உண்மை ..இதுவே அன்றைய ஈழ சேனனின் அனுராத புர அரசு வீழ்ச்சி அடையவும் காரணமானது ..
நீதி நெறி தவறாமல் சமய சார்பு இல்லாமல் சிறந்த ஒரு அரசை ஈழ சேனன் அனுராத புரத்தில் இருந்தும் நாக குத்தன் கதிரை மலையில் இருந்தும் ஆண்டு வந்தார்கள் .மிகப்பெரும் கடல் அழிவில் இருந்து உயிர் தப்பிய ஈழ மக்கள் மீண்டும் தங்கள் வாழ்வில் சிறந்த அரசர்களின் வருகையால் உறுதி கொள்ள தொடங்கினார்கள் .மக்கள் அன்றாட வாழ்வில் சகல வளங்களோடும் சிறப்பான வாழ்வியல் நீரோட்டத்தில் தமது எதிர்கால கனவுகளை நனவாக்கும் திட்ட நிர்ணயங்களோடு வாழ்ந்து வந்தார்கள் .பௌத்தத்தை மதம் என்று ஏற்றுகொண்ட மக்கள் கூட அசோகனின் மௌரிய தேசத்தில் இருந்து வந்த பிக்குகளின் வழிகாட்டலில் பிக்குகளானவர்களின் வழி நடத்தலில் எந்த வித குறையும் இன்றி வாழ்த்து வந்தார்கள் .
நாட்டு மக்கள் சகல நலன்களுடனும் வாழ்ந்து வரும் காலத்தில் ஈழ சேனனுக்கும் பொறுப்புக்கள் குறைவாக இருந்தது .அந்தவேளையில் அவர் சொந்த வாழ்கையில் வம்சத்தை விருத்தி செய்து நாட்டுக்கு நல்ல இளவரசனை கொடுப்பதற்காக பொன்னன்மை நாகச்சியாருடன் இல்லற வாழ்வை இனிதே நடத்தி வந்தார் ,அனுராத புர அரசின் அந்த புர வாழ்வின் அன்பில் அவர்கள் திளைத்ததன் அரும் பலனாக எல்லாளன் என்ற செந்தமிழ் குழந்தையை மறத்தமிழ் மழலையை பொன்னம்மையார் பெற்றெடுத்தார் .வலம்புரி சங்கின் வளைவுகள் அவன் முதுகில் கண்ட தந்தை ஈழ சேனன் ,நீதி தவறாமல் நாடாள ஒரு மைந்தன் பிறந்து விட்டான். என்ற சந்தோசத்தில் மகிழ்சியின் எல்லையை முதன்முறையாக தொட்டார் .தன் எல்லைகளை விரிவாக்கி ஆழ பிறந்தவன் என நினைத்தாரோ என்னெவோ எல்லாளன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார். நாள் தோறும் மேனி சிலிர்த்து புருவங்கள் அழகாகி உருவத்தில் ஒளியாகி எல்லாளன் வளர்ந்து வரும் வேளையில் ஈழ சேனன் காதுக்கு இன்னுமொரு இனிமை தரும் அருமையான செய்தி எட்டியது ,அவன் தங்கை ஈழ நாகசியார் கதிரைமலையில் ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள் என்பதுவே அதுவாகும் .நாக குத்தன் தன் மகனுக்கு திக்கஜன் என்று பெயர் இட்டு உள்ளதாகவும் அறிந்தான் .எல்லைகளை காப்பாற்ற எல்லாளனை பெற்றெடுத்தவர் . திக்கெல்லாம் வென்றுவர திக்கஜனும் பிறந்த செய்தி அறிந்து மிகவும் சந்தோசப்பட்டார் .காலமும் கடவுளும் நிர்ணயித்த வசந்தமான அந்த நாட்கள் அவர்களுக்கு மிகவும் மகிழ்சியான காலமாக இருந்தது .உறவுகளில் உள்ளத்தில் உணர்சிகள் சந்தோசமாக நகர்ந்தது .பூமியை ஆள்பவன் பூமா தேவியை பெற்றெடுக்கும் ஆசையில் வாழ்வான் என்பதும் பொன்னம்மையார் தாரணியையும் ,ஈழ நாகசியார் ,அரச தேவியையும் பெண் குழந்தைகளாக பெற்றெடுத்ததால் மெய்யானது ..உறவுகள் ஒருமைப்பட தலைவர்கள் வழிவகுபார்கள் என்பது தமிழன் வரலாறு சொல்லும் பூர்வீக உண்மைதான் ..மச்சாளை மணம் முடிக்கும் மாண்புமிகு பண்பு ,அக்காலத்திலேயே ஆரம்பமானது என்று எண்ணத்தோன்றும் வகையில் நிகழ்வுகள் பதிவாகியது . .காதல் என்ற கசப்பான அனுபவத்தால் சில இடங்களில் உணர்வுகள் தடம்மாறியதும் காலத்தின் நிகழ்வுகளோடு பார்ப்போம்,,,
அனுராத புர பூர்வீக ஈழ வம்ச அரச குடும்பம் இவ்வாறு சந்தோஷ குதுகலங்களோடு உறவாடி கொண்டு இருக்க மறுபுறம் தோல்வி கண்டு ஓடி ஒழித்த,கலப்பு வம்சத்தினர் உருகுணை உறவினர்களுடனும் கதிர்காம சத்திரியர்களுடனும் கல்யாணி அரசர்களுடனும் அரசியல் பலம் சேர்ப்பதற்காகவும் ஆசைகளை தீர்த்து கொள்வதற்காகவும் குழப்பமான பல திருமணங்களை செய்தார்கள் .இந்த இடத்தில் உங்களுக்கு நான் உருகுணை உறவினர் யார் ,,கதிர்காம சத்திரியர்கள் யார்,, கல்யாணி அரசர்கள் யார் என்ற சந்தேகத்தை தீர்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணர்கின்றேன் .அதாவது உருகுணை உறவினர்கள் என்பவர்கள் மூத்த சிவன் மரபில் வந்த கலப்பு இனத்தவரே ,மூத்த சிவன் அரச உரிமையை காலங்களாக பிரித்து தனது பிள்ளைகள் ஒன்பது பேருக்கும் உறுதி அளித்தார் ,அந்த வகையில் தேவ நம்பிய தீசனுக்கு பின் அவன் முதல் தம்பி மகா நாகன் என்பவனே முடிக்கு உரிய இளவரசனாக இருந்தான் .ஆனால் அனுராத புரத்தின் மணி மகுடம் தன் மைந்தனின் தலையை அலங்கரிக்க வேண்டும் என்று தேவ நம்பியதீசனின் மனைவி விரும்பியதால் .தன் மச்சினன் மகா நாகனை கொலை செய்ய நஞ்சு கலந்த ஒரு மாம்பழத்தை பல மாம்பழங்களுடன் சேர்ந்த தட்டொன்றில் மேலே வைத்து மகா நாகனுக்கு அனுப்பி வைத்தார் .அந்த இடத்தில் மகா நாகனுடன் நின்ற இவள் மகனே அந்த மாம்பழத்தை எடுத்து உண்டு இறந்து விட்டான் .இந்தத் துர்மரணத்தினால் பயமடைந்த மகாநாகன் தனது மனைவி, உற்றார், சுற்றம், படையணிகள், பணியாட்கள் என்பவர்களுடன் உருகுணைக்கு ஓடிச் சென்றான்.அவ்வேளை உருகுணையில் கதிர்காமச் சிற்றரசனான கதிகாம வேடுவ சத்திரிய மன்னன் ஒருவன் இருந்தான். தான் திறை செலுத்துகின்ற அனுராதபுரத்தின் இளவரசன் மகாநாகனை சத்திரிய மன்னன் தக்கவாறு வரவேற்று தன் தலைநகரிலிருந்து சிறிது தூரத்தில் வளமான ஓரிடத்தில் குடியமர்த்தினான். அவ்விடத்தினை மகாநாகன் பெரியதொரு கிராமமாக மாற்றி அதற்கு 'மகாகமம்' எனவும் பெயரிட்டுக்கொண்டான். ஒரு சிற்றரசில் இரண்டு ஆட்சித் தலைவர்கள் உருவாகிவிட்டனர். உடனடியாகப் பிரச்சனைகள் எழவில்லை,,சில காலம் இவர்கள் நன்றாக தடம் பதிக்கும்வரை நல்ல நண்பர்களாக நடித்துகொண்டு வாழ்ந்தார்கள் .பின்னான மனித மனத்தின் மாற்றங்களை நிகழ்வுகளின் தரவுகளின் அடிப்படையில் காலத்தின் கட்டாயமாக வந்தால் பார்ப்போம் ,,
கதிர்காம சத்திரியர்கள் இவர்கள் ஈழத்தின் பூர்வீக மக்களின் வேடுவ குலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் காலம் காலமாக கதிர்காம சிற்றரசை ஆண்டு வந்தார்கள் .இவர்கள் ஆரம்பத்தில் நாக அரசர்களுடன் நல்ல உறவுகளையே வைத்து இருந்தார்கள்.காலப்போக்கில்
கல்யாணி அரசர்கள் .இவர்கள் நாக அரசர்கள் மகோதரன் குலோதரன் வழி வந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக கல்யாணி இராட்சியத்தை ஆண்டு வந்தார்கள் .நாக அரசர்கள் திருமண பந்தங்களை மாற்றி செய்த காரணத்தால் அவர்களுடன் கோபித்து கொண்டு மூத்த சிவன் பிள்ளைகளுடன் உறவை வளர்த்தார்கள் அவர்களுடன் கலப்பு திருமணங்களையும் செய்து வந்து அவர்கள் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து தமது அரசை காலபோக்கில் இழந்தார்கள் ,,
தோல்விகண்டு தப்பி ஓடிய தீசன் சகோதரர்களுடன் தப்பி சிறுவனாக ஓடியவனே அசேலன். .இவன் தீசனின் ஒரு தம்பியான மகா சிவன் என்பவனுடைய ஒன்பதாவது மகன் -இவன் உருகுணையில் அடைக்கலம் புகுந்ததில் இருந்து இழந்த அரசை கைப்பற்ற சிறுவனாய் இருந்துகொண்டே சூழ்ச்சிகள் செய்தான் ,.,சிறுவனாய் இருந்ததால் சிறிது உரு மறைப்புக்கள் செய்து கொண்டு அனுராதபுர அரசுக்குள் ஊடுருவி தகவல்களை சேகரித்தான் ,புத்த பிக்குகளின் உதவியை நாடி சூழ்ச்சி வலைகளை மிகவும் பிரகாசமாக விதைத்தான் .அனுராத புர அரசன் ஈழ சேனன் எந்த எதிர்ப்பும் இல்லாததால் படைகளை தகர்த்தி நாட்டின் முன்னேற்ற பணிகளில் வீரர்களை ஈடுபடுத்தி இருந்ததையும் ,இல்வாழ்வில் உறவுகளோடு குதுகலித்து இருப்பதையும் சில காலத்துக்கு பின் சாதகமாக எடுத்துக்கொண்ட அசேலன் தக்க தருணத்தில் தனது பாண்டிய மூதாதையரிடமும் உதவி பெற்றான். உருகுணை உறவினர்களின் உதவியுடன் கல்யாணி , கதிர்காம சிற்றரசர்களின் உதவியுடனும் ஒரு பெரும்படையை சேர்த்து கொண்டான் .ஈழ சேனன் படையில் இருந்து விலகிய கலப்பு வம்ச வீரர்களையும் சலுகைகள் செய்து தன் படையில் சேர்த்துகொண்டான் .ஈழ சேனனின் அரசில் உயர்பதவிகளில் இருந்த சிலரிடமும் உதவிகள் பெற்றான் .இவர்கள் நாக குத்தனிடம் சரணடைந்து நல்ல பதவிகளை பெற்றவர்கள் ,இவ்வாறாக மீண்டும் ஒரு பெரிய சூழ்சியை செய்து அனுராத புர பேரரசின் மீது மிகப்பெரிய படையோடு அசேலன் படை எடுத்தான் ,,,
எந்த ஒரு படை எடுப்பையும் எதிர்பார்த்து இராத ஈழசேனன் 22 வரிட தனது ஆட்சியின் முடிவின் பொழுதுதான் உணர்ந்துகொண்டான் .அமைதி நிலவிய தேசத்தில் திடிரென புயலாக உருவாகிய போர் நீண்ட நாள் எதிரிகள் செய்து வந்த சதியால் தான் உருவாகியது என்று .அசேலன் படை எடுப்பில் தனது இராட்ச்சியத்தில் வாழ்ந்த பிக்குகளும் கலப்பு வம்ச ஆதரவாளர்களும் அசேலனுக்கு கொடுத்த ஆதரவை பார்த்து ஒருகணம் நிலை குலைந்து போனான் .இது ஒரு சில நாளில் ஏற்பட்ட மாற்றம் அல்ல என்பதை அவன் புரிந்துகொண்ட வேளையில் காலம் கடந்துவிட்டது .ஆபத்து கோட்டை வாசலில் காத்து நின்றது .கதிர மலைக்கும் ஈழவூருக்கும் செய்தி அனுப்பி படை தருவிக்க கால அவகாசம் இருக்கவில்லை .,தன் தோள் பலத்தையும் உடை வாள் பலத்தையும் மட்டுமே ,நேர் முகமாக பார்க்க வேண்டி தருணம் எதிரி யார் நண்பர் யார் என்று தெரியாத குழப்ப நிலை .நம்பிக்கைக்குரிய தளபதிகளிடம் கூறினான் .அரசன் வாழ்வில் எதுவும் நடக்கலாம் எதற்காகவும் தமிழ் வீரம் மண்டி இடக்கூடாது கடைசி வாளேந்திய வீரன் இருக்கும் வரைக்கும் போராடியே சாவோம் ,,என்று ஆணை இட்டான் ,அரசன் ஆணையை ஏற்றுகொண்ட தளபதிகள் ,,நாங்கள் என்றைக்கும் உங்கள் வழியிலேயே வருவோம்! ஆனால் அரச வம்சத்தை மட்டும் காப்பாற்ற வழி செய்யுமாறு ஈழ சேனனை இரந்து கேட்டார்கள். இளவரசன் எல்லாளனையும் இளவரசி தாரணியையும் மகாராணியையும் ஈழவூருக்கு அனுப்ப ஈழ சேனன் சம்மதித்தான் ,,!!அரச வம்சம் காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு செல்லும் வரையாவது நாம் பெரும் போர் புரிய வேண்டும் என எல்லோரும் ஏகமனதாக முடிவெடுத்தார்கள் ,மிகவும் சாதுரியமாக மிகப்பெரிய படையோடு வீராவேசத்தோடு போரிட்டார்கள் ,,அரச வம்சம் காப்பாற்ற பட்டது ,,!ஈழ சேனனும் தளபதிகளும் நம்பிக்கைக்கு உரிய வீரர்களும் பல மணித்தியால கடும் போருக்கு பின்னர் வீர சுவர்க்கம் அடைந்தார்கள் ,,ஈழ வரலாற்றில் தங்கள் பெயர்களை வீர மறவர்கள் வரிசையில் முதன்மையாய் பொறித்தார்கள் ..செய்தி அறிந்து அவசரமாக படை திரட்டி வந்த நாக குத்தனும் உத்தர பிரதேசத்துக்குள் அதாவது நாக தீபத்துக்குள் அசேலன் படைகள் புகுந்து அரசவம்சத்தை கொலை செய்யாமல் கடுமையாய் போராடி தடுத்து விட்டு தன் நண்பன் ஈழ சேன மன்னன் வழியில் தனது வீர பயணத்தை முடித்து வீர சுவர்க்கம் எய்தினார் ,,,
அசேலன் மாவீரன் ஈழ சேனனின் துண்டிக்க பட்ட தலையை அனுராத புர கோட்டை வாசலில் மூங்கில் கழியில் குற்றி கேவலமாக மக்கள் பார்வை இடசெய்தான் ,,,,,,மகத்தான மன்னனினின் இறப்பால் மக்கள் சோகக்கடலில் மூழ்கினர் . அவர்கள் பாசத்துக்கு உரிய இளவரசன் எல்லாளன் வந்து கொடுங்கோல் அரசன் அசேலனை வெல்வானா ,,சோகத்தில் மூழ்கிய தன் இனத்து மக்களை காப்பாற்றி இந்த தேசத்தின் மகுடத்தை கிரீடமாய் அணிவானா ;,,ஈழவம்ச பூர்வீக .அரசியல் பயணத்தின் நிகழ்வுகளின் நீரோட்டத்தில் உங்களை அடுத்த பகுதிக்கு அழைத்து சென்று விடுதலைக்கான விடையை பகிரும் வரை ஓயாது என் எழுத்து பயணம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக