பிரான்ஸ் மன்னர் நான்காம் ஹென்றியின் தலை, 400 ஆண்டுகளுக்குப் பின்னர், விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர், அந்த மண்டை ஓடு பல்வேறு தரப்பினரிடமும் கைமாறி சென்றது. அது மன்னர் நான்காம் ஹென்றியுடையது தானா என்பதில் சந்தேகம் எழுந்தது. அதுகுறித்து, விஞ்ஞானிகள், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த தலையை, ஒன்பது மாதங்களாக ஆய்வு செய்தனர். மரபணு உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.மேலும், அவரது தலையில் ஒரு காய தழும்பும் இருந்தது. காதில்ஆபரணங்கள் அணிந்ததற்கான தடயம், கிரீடம் அணிந்த தடயம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யதில்,அந்த அடையாளங்களும்
ஒத்துப்போனது.இதையடுத்து, அது நான்காம் ஹென்றியின் தலைதான் என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். இந்த ஆய்வு குறித்த விவரங்களை அண்மையில், விஞ்ஞானிகள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக