நடிகை ஷோபனா : விஷ்ராந்தி அறக்கட்டளை, பெங்களூரில் பல ஆண்டுகளாக முதியோர் மர்றும் அனாதை இல்லங்கள் நடத்தி வருகிறது. அவர்களின் நல்வாழ்வுக்காக, ஆண்டு தோறும், அறநெறி நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி, நிதி திரட்டி உதவி வருகிறார் நடிகை ஷோபனா.
புகழ் பெற்ற நாட்டியப் பேரொளி பத்மினி மற்றும் திருவாங்க்கூர் சகோதரிகளின் மருமகளும், நடிகை சுகுமாரி மற்றும் நடிகர் வினீத் அவர்களின் நெருங்கிய உறவினரான நடிகை ஷோபனா, 80 மற்றும் 90 களில், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத் துறையை கோலோச்சியவர். தனது சிறந்த நாட்டிய மர்றும் நடிப்புத் திறமையால பல விருதுகளைப் பெற்றவர்.
யாத்ரா ( மலையாளம்), தளபதி (தமிழ்), அய்யர் தி க்ரேட் ( மலையாளம்), தேன் மாவின் கொம்பத்து ( மலையாளம்/ முத்து), மணிச் சித்ர தாழ் ( மலையாளம் / சந்திரமுகி), ருத்ர வீணா ( தெலுங்கு)போன்ற பல புகழ்பெற்ர வெர்றி படங்களில் நாயகியாக நடித்தவர்.
""மனிச் சித்ர தாழ்"" மர்றும் ""மித்ர் மை ப்ரெண்ட்"" படங்களுக்காக தேசிய விருது பெற்றவர்.
எனக்குள் ஒருவனில் ( 1984) தொடங்கிய இவரது கலைப்பயணம் கோச்சடையானிலும் தொடர்கிறது என்பவை செய்திகள்.
நாட்டியத்திற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட செல்வி ஷோபனா திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தையை தத்து எடுத்து வளர்த்து, சமூக சேவை நாயகியாகவும் விளங்குகிறார்.
புகழ் பெற்ற நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் மானவியான செல்வி ஷோபனா, வெளிநாடுகளிலும் கலை நிகழ்ச்சி நடத்தி, புகழ் பெற்றவர்.
தனியாக "கலார்ப்பனா" என்ற பெயரில் ஒரு நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிரார்.
புகழ் பெற்ற நடிகைகள் ரேவதி, சுஹாசினி, ரோஹினி போன்ரவர்களின் நெருங்கிய சினேகிதியும் ஆன நடிகை ஷோபனாவுக்கு, கலைத் துறைக்கு ஆற்றிய பணிகளுக்காக, 2006ம் ஆண்டு, இந்திய அரசின் 4ம் உயர்ந்த சிவிலியன் விருதான, பத்ம விருது(பத்மஸ்ரீ) வழங்கப்பட்டது.
கண்களால் காவியம் பாடும், நடிகை பத்மஸ்ரீ ஷோபனாவுக்கு இன்று 46ம் பிறந்தநாள் ( நம்பவே முடியலை.!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக