தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 30, 2012

தமிழர்களின் பிரச்னையில் LSSPயின் கருத்துக்கள் தோல்வியயுற்றதாய்த் தோன்றுவதன் காரணம்!


தமிழர்களின் பிரச்னையில் LSSPயின் கருத்துக்கள் தோல்வியயுற்றதாய்த் தோன்றுவதன் காரணம் இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியம் தொழிற்துறை ரீதியாக வளர முடியாமல் போனதும் புதிய தொழிலாள வர்க்கம் உருவாகி சோசலிசப் புரட்சியின் கூறுகளைப் பலப்படுத்தத் தவறியதுமாகும். 

இந்தியத் துணைக்கண்டம் பலம்பெறவதற்கு ஏகாதிபத்தியங்கள் விடவில்லை. எனவே, இப்பிரதேசம் பழைய உற்பத்தி வடிவம்களில் வலுக்குறைந்த உற்பத்திச் சக்திகளிடையே தொடர்ந்தும் விடப்பட்டன.

சமயம் சாதி, இனம், பிரதேசம் சார்ந்த பிரச்னைகளை ஊடறுத்து ஒரே திசையில் வளரத்தக்கப் பொருளாதாரம் வளரவில்லை. மாடும், மாட்டு வண்டியும் அம்மி, உரல், ஆட்டுக்கல் தொழிநுட்பமும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை வைத்துக் கொண்டு எப்படி சாதி சமயத்தை ஒழப்பது இவைகளைத் துறந்து கண்டம் தழுவிய மனிதர்களாவது?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் எங்கும் ஏகாதிப்த்தியங்கள் தூண்டிவிடத்தக்க பழைய இனக்குழுத்தன்மை வாய்ந்த மத மற்றும் தேசியப் போராட்டங்கள் நிலவின. பழைய விவசாய பொருளாதாரம் சாதியமைப்பை குலைய விடவில்லை. இயந்தியத் தொழில் தொழிநுட்பம்வளர்ந்து வந்திருந்தால் சாதி தளரத் தொடங்கியிருக்கும். எனவே, இந்திய உபகண்டத்தின் பொதுநிலையான பின் தங்கிய பழைய பொருளாதார உறவுளே அது சார்ந்த சமுதாய மனோபாவமே இடதுசாரிகட்கு தடையாக இருந்தது.

இலங்கையில் தமிழர் பிரச்சனை மட்டுமல்ல. கண்டிச் சிங்களவர். கரையோரச் சிங்களவர் பிணக்குகளும் தமிழர் பிரச்னைக்கு சமமாய இருந்தன. இவை இனக்குழுத்தன்மை வாய்ந்த முரண்பாடுகளாகும்.

தமிழர்களோ ஒரு இனமாக வளரத் தேவையான பொருளாதாரம், சமூக அடிப்படைகளைப் பெற்றிருக்கவில்லை-இன்றும் புலி அழிவுக்குப்பின்னும் அது நடந்தேறவில்லை! தமிழர்கள் தனித்தேசிய இனம் என்று கத்துபவர்கள் தேசிய இனங்கட்கான வரையறுப்புக்களை பூரணமாய் விளங்கவில்லை. ஸ்டாலினின் தேசிய இனம் எனில் மொழி, பொருளாதாரம், பண்பாடு நிலப்பரப்பு என்பவை இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் தேசிய இனம் சோசலிச எதிர்காலத்தின் சாதகபாதகத்திற்கு உட்பட்டது எல்லா தேசிய இனங்களையும் அவற்றின் புவியியல் சூழல் ஏகாதிபத்தியங்களுடனான உறவுநிலை இவைகளைக் கணக்கெடுக்காமல் ஆதரிக்க முடியாது.

தமிழ் ஈழப்போராட்டமும் புலிகளும் ஏகாதிபத்தியத்தில் அரசியற் கருவியாகிவிட்டன என்பதுடன் உலக மயமாகிய பொருளாதாரத்தின் காலத்தில் தேசியம் சுயநிர்ணயத்துக்கான போராட்டங்கள் காலங்கட்ந்தவையாகும்.by Dr.Kanthasamy(Trincomalee )

No comments:

Post a Comment