நம்மில் இருந்து வேறுபட்ட திறன்களை(ண்) கொண்டோரை மாற்றுத் திறனாளி(ண்) என்கிறோம்.அவயவங்களில் குறைபாடு கொண்டோரை மாற்றுத் திறன் கொண்டோர் என்பது பொருந்துமா?வலது குறைந்தோர் என்றும் சொன்னார்கள்,பின்னர் அது நக்கல் என்றாகி இப்போது பொருந்தாத ஒன்றை சொல்கிறார்கள்,நாளை இதுவும் நக்கலாகும்.அதற்கு உதாரணமாக பல சொற்களை காட்டமுடியும்.ஒரு பொருளைக்குறித்த சொல் பின்னர் வேறு பொருளுக்குரிய அடைமொழியாக்கப்பட்டது,சரக்கு(தமிழ்நாட்டில் குடி,ஈழத்தில் இளம் பெண்கள்),கொட்டை,மாமா இன்னும் பல.முன்பு கட்டாடி என்றும் வண்ணான் என்றும் சொன்னவர்களை சலவைத் தொழிலாளி என்றும் அம்பட்டன் என்பவரை சவரத் தொழிலாளி என்றும் கள் இறக்குபவரை சீவல் தொழிலாளி என்றும் மாற்றினார்கள்.அனால் அதன் பொருள் மாறவில்லை.புதிய சொற்களின் வரவால் மொழியில் மாற்றங்கள் வர எதிர்கால சந்ததிக்கு பழைய வரலாறுகளை அறிய மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்படும்,இப்போது அடைந்துள்ள மாற்றங்கள் எங்கள் வரலாற்றுக் கல்வெட்டுக்களை எங்களால் வாசித்தறிய முடியாத நிலைக்கு தள்ளியது போல நம் சந்ததிக்கும் நமது கால நிகழ்வுகளை அறிய முடியாத நிலையை நாம் உருவாக்கி வருகிறோம்,ஆங்கிலேயன் இருந்த பொது தமிழர் தமிழை நேசித்து அதற்காக போராடினர்,அவர்கள் போய் எழுபது வருடங்கள் கடந்தபின் தமிழை மறந்து ஆங்கிலத்தில் மூழ்கியுள்ளது தமிழ் இனம்.நாளை சொற்களும் மாறினால் அர்த்தம் தெரியாத மொழியாகி தமிழ் ஆங்கிலத்தால் ஒடுங்கிப்போகும்.எனவே சிந்தியுங்கள்.பழைய சொற்களுக்கு உயிர் கொடுப்பதால் வரலாறுகளை நாமே வாசித்தறியும் நிலையை வளர்க்க முடிவெடுங்கள் நன்றி!!
26ne2 von tvvijay14
26ne3 von tvvijay14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக