தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மார்ச், 2012

செண்பகம்(சென்ரோபஸ் சினென்சிஸ்)!


செண்பகம் தமிழர்களின் தேசிய பறவையாக உள்ள இப்பறவையானது ஆங்கிலத்தில் குரோ பீசன்ட் என அழைக்கப்படுகிறது. இப்பறவை இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. பறக்கும் தன்மை இல்லாத செண்பகம் தரையில் ஓடியும், மரக்கிளைகளில் தாவியும் திரியும். அதிகாலை நேரங்களில் மரங்களில் அமர்ந்தவாறு குரல் எழுப்பிக் கொண்டிருக்கும். இவற்றை, பொதுவாக வீட்டுதோட்டங்கள், மரங்கள் அடர்ந்த தோப்புகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் காணலாம்.

செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. இதன் சிறகுகள் நிறம் செம்பழுப்பு, இதன் காரணமாவோ என்னவோ இப்பெயர் வந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. உடல் பளபளப்பான கறுப்பு நிறம் உடையது. இதன் கறுப்பு நிற அலகு விரலால் வளைத்துவிடும் அளவு மென்மையானது. வால் குயில் போல் நீண்டது. கம்பளிபுழுக்கள், நத்தைகள், சிறிய சுண்டெலிகள், பறவை முட்டைகள், நல்லபாம்பு குஞ்சுகள், அரணைகள் மற்றும் நத்தைகள் போன்றவை இதன் உணவுகள். புதர்கள், சருகுகளை கிளறுவதற்கு வசதியாக கால் விரல்களில் இரண்டு முன்னும் இரண்டு பின்னும் அமைந்துள்ளது.

செண்பகத்தின் இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையிலான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் முட்டைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ்.


****தமிழர்களின் தேசிய பறவை செண்பகம் அல்ல மாட புறா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக