இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது வரனாசி. கங்கை நதி பாய்ந்தோடும் இங்கு தான் புகழ்பெற்ற பல இந்து ஆலயங்கள் உள்ளன.
இங்குள்ள பிரசித்தி பெற்ற துர்க்கா கோவில் ஒன்றில் தான் மேற்படி வித்தியாசமான மெய்சிலிர்க்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பொதுவாக அம்மன் ஆலயங்களில் தீ மிதிப்பு வைபவம் இடம்பெறுவது பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இங்கு அதையும் விட ஒரு படி தாண்டி கொதிக்கும் பாலை உடலில் ஊற்றிக் கொள்ளும் அதிர்சிகரமான நிகழ்வு இடம்பெறுகின்றது.
கோயிலின் முன்பு பெரிய பானைகளில் பக்தர்கள் பால் காய்ச்சுகிறார்கள்.
பால் நன்றாக கொதித்து வந்ததும் ஆவி பறக்க கொதிச்சுக் கொண்டிருக்கும் பாலை அப்படியே தூக்கி தனது உடலில் ஊற்றுகிறார் சாமியார்.
கொதிக்கிற பாலில் சிறு துளி பட்டாலே நாங்கள் துடிதுடித்துப் போவோம். ஆனால் இந்த சாமியாரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் விட எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் மேலும் நின்று ஆச்சர்யம் காட்டுகிறார் இந்த வினோத சாமியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக