தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நம் காலடி மண்ணிலிருந்தே புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து!

உலகின் அடுத்த தலைமுறை ஆன்டிபயாடிக் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து நமது காலடி மண்ணிலிருந்து உருவாக வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில்(வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆய்வின் முடிவில், உலகின் அடுத்த தலைமுறை ஆன்டிபயாடிக் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குகைகள், வெப்ப நீரூற்றுகள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ராக்பெல்லர் பல்கலைகழகத்தின் சீன் பிராடி கூறுகையில், சுற்றுச்சூழலிருந்து கிடைத்த பக்டீரியாக்கள் திகைப்பூட்டும் பல புதிய மூலக்கூறுகளை உலகிற்கு வழங்கியது.
அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நம்பமுடியாத பன்முகத்தன்மையே நுண்ணுயிரிகள் மூலம் ரசாயன உற்பத்தி செய்யும் நமது கனவுக்கான முதல் படி என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக