தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 பிப்ரவரி, 2018

உங்கள் பெயர் S என்ற பெயரில் ஆரம்பிக்கிறதா?... வாழ்க்கை ரகசியம் இதோ!(பொய்)


குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்கள், ஒருவரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் பெரும்பாலானோரது பெயர் குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பமாகும். அதிலும் “A, S, J” போன்றவை மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது. உங்களது பெயர், இவற்றில் ‘S’-இல் ஆரம்பமானால், இக்கட்டுரை உங்களுக்கானது.
இரக்கமுடையவர்
‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் முன்பு யாரேனும் பிரச்சனையில் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்து விடுவிக்க பெரிதும் முயற்சி செய்வர்.
எண் கணிதத்தின் படி, ‘S’ என்ற எழுத்து எண் ஒன்றிற்கு இணையானது. இத்தகையவர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர். இதுப்போன்று ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விசுவாசமானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். இத்தகையவர்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக பேசத் தெரியாது. வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட, செயலில் காட்டவே விரும்புவர்.
நம்பத் தகுந்தவர்
இவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.
உணர்வுகளை மறைப்பார்கள்
இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இதனாலேயே இவர்களைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். இந்த குணத்தாலேயே, இவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.
மிகவும் கவர்ச்சிகரமானவர்கள்
இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்காக அதிகம் சந்தோஷமும் கொள்வார்கள், துன்பமும் கொள்வார்கள். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.
வெற்றிகரமான தொழில்
இத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பர்.
உறவுகளில் உண்மையாக இருப்பர்
ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.


http://www.manithan.com/lifestyle/04/160058?ref=ls_d_manithan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக