தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழ் மொழியின் தோற்றம் ,,,,,,, வரலாற்று பார்வை ,,,

உலகில் அடையாளம்காணப்பட்டு இருக்கும் 6809 மொழிகளில், பேசவும் எழுதவும் கூடிய அந்தஸ்தை பெற்றிருக்கும் 700 மொழிகளில் தங்களுக்கு என்று சொந்தமான வரிவடிவத்தில் எழுதப்படும் 100 மொழிகளில் மொழித்துறை ஆய்வாளர்கள் பட்டியலிட்டிருக்கும் 8 செம்மொழிகளில் அதாவது மூலமொழிகளில் ஆதிமூலமொழியாக உண்மையில் இருப்பது தமிழ் மொழி, செம்மொழிகளை வரிசைப்படுத்தியவர்கள் செய்த சதிகளால் வகைப்படுத்தலில் தமிழ் மொழி ஆதி மூல மொழி என்ற அந்தஸ்தை பெறமுடியவில்லை.ஆனால் மிகவிரைவில் ஆதி மூல முதல் மொழி தமிழ் மொழியென உலக அளவில் தமிழ் அங்கீகாரத்தை பெறும் இது உறுதியானது என்பதை இன்றே சொல்லிவைக்க விரும்புகின்றேன். 

ஒரு மொழியின் வரலாற்றை சரியாக நிறுவுவதற்கு ஆதார சான்றுகள் அவசியமாகின்றது.சான்றுகள் இல்லாமல் எழுதப்படும் வரலாறுகள் கதைகளாகத்தான் கருதப்படும்.ஆனால் கி மு 300 முற்பட்ட காலத்தில் எந்த ஒரு மொழியின் வரலாற்றையும் நிறுவதற்கான எழுத்துவடிவிலான ஆவண ஆதார சான்று இதுவரை எந்தவொரு ஆய்வாளர்கைகளிலும் கிடைத்ததாக தகவல் இல்லை. எனவே எமது மொழியின் தொன்மையை நிறுவுவதற்கு பண்டைய செவிவழி கதைகளாக பேணப்பட்டுவந்து கி .மு 300 பின்னர் எழுத்துவடிவிலான ஆவணங்களாக உருவாக்கப்பட்ட வரலாற்று கதைகளில் இருந்தே பௌத்தறிவு ரீதியாக சரியானவற்றை தெரிவுசெய்து எழுதவேண்டும். 

மொழிகள் தோன்றிய காலத்தை உறுதியாக கணிக்கமுடியாத நிலை சர்வ உலகத்திலும் இன்றும் இருக்கிறது.அந்தவகையில் எமது தமிழ்மொழியின் தொன்மையை நிறுவ முற்படும்பொழுது எமக்கும் அதன் தொன்மையை நிறுவுவதற்கு பல முரண்பாடுகள் தோன்றுகின்றது .இதில் எமது மொழியியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ,அறிவியலாளர்களும் வருகின்ற முக்கிய பிரச்சனை அழிந்துபோன குமரிக்கண்டம் இருந்ததா? இல்லையா? என்பதாகும்.குமரிக்கண்டம் இருந்தது என்பதை ஆய்வாளர்களான ,ஹிராடஸ் ,,பெர்டினெல் கித்தேல்,,,பிளேட்டொ,,,திலு ஓல்டுகாம் ,,,எக்கேல் ,,,கிளேற்றர் ,,,கட்டு எலியட் ,,,தேவநேயப்பாவாணர்,,,போன்றவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். 

எமது தமிழ்மொழி குமரிக்கண்டத்தின் பொதிகை மலையில் தோன்றியதாக மொழி ஆய்வாளர்கள் கருத்துக்களை எழுதியிருக்கின்றார்கள்.இங்குதான் அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதிய அகத்தியர் வாழ்ந்தார் என்று கருதப்படுகிறது.(பதினெண்சித்தர்களில் ஒருவராக இருந்த சீன அகத்தியர் இவரல்ல)பொதிகை மலை இன்றைய இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு நேர் கீழே மடகாஸ்காரையும் அவுஸ்ரேலியாவையும் இணைக்கும் நேர் கோட்டில் தொடும் புள்ளியில் இருந்ததாக முதுநிலை ஆய்வாளர்கள் படவிளக்கங்களோடு குறிப்பிடுகின்றார்கள்.பொதிகை மலைக்கு அண்மையில் தான் கடல் அழிவில் அழிந்த முதல் சங்கம் நடந்ததாக கருதப்படும் தென் மதுரை இருந்திருக்கின்றது. 

எனவே பொதிகையில் தோன்றிய எமது மொழி எப்பொழுது தோற்றம்பெற்றது என்று ஆரம்ப கணிப்பை மேற்கொள்வது மிக மிக கடினமானது. 

ஆதிமனிதன் விழியாலும் முகபாவனைகளாலும் ஒருவருக்கு ஒருவர் சைகை செய்து தங்கள் தகவல் பரிமாற்றத்தை செய்து,காலப்போக்கில் தங்கள் குரல் ஓசையால் ஒலிகளை உருவாக்கி,அதிர்வுகளை ஏற்படுத்தி சித்திரங்களை வரைந்து புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி, ஒலிவடிவத்தில் குரலில் இருந்து எழும் சிறு சத்தங்களுக்கு ஏற்ப இலகுச்சித்திரங்களை வரைந்து அந்த இலகுச்சித்திரங்களை காலப்போக்கில் சிறு சொற்களாக்கி தாங்கள் பேசும் குரல் ஒலியோடு இணைத்து மொழியை உருவாக்கி தங்கள் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக செய்ய தொடங்கினார்கள்.குரலில் இருந்து எழும் பேச்சு மொழியை குரல் அசைவுக்கு ஏற்ப மாற்றமடைய செய்தவர்கள். அவை அனைத்துக்கும் சித்திரங்களால் ஆன சொற்கோர்வைகளை உருவாக்கி எழுத்து வடிவங்களை உருவாக்கி கொண்டார்கள்.இந்த எழுத்துவடிவம் ஒரு வளர்ச்சி நிலையை அடையும் வரை மாற்றம் அடைந்திருக்கின்றது. ஆனால் பேச்சு மொழி ஒன்றாகவே இருந்திருக்கின்றது. 

காலப்போக்கில் அத்லாந்திக் என்ற இன்னொரு கண்டத்தவர்களின் அறிமுகம் ஈரானிய பைவர் கணவாய் வழியாக அண்ணளவாக இன்றைக்கு 13000 ஆண்டுகளுக்கு ஏற்பட்டது. அந்தவேளையில் லெமூரியா என்ற குமரிக்கண்டத்தில் வாழ்ந்த எம்மவர்கள் தங்களை அவர்களில் இருந்து வேறுபடுத்தி உணர தங்கள் மொழிக்கு தமிழ் என்றும் அதனை பேசும் தமது இனத்தவர்களை தமிழர்கள் என்றும் பெயரிடத்தொடங்கினார்கள். 

இந்த காலத்துக்கு பின்னரே வரலாற்றில் வரும் பிளேட்டொ என்ற கிரேக்க தத்துவ மேதை கூறும் முதலாவது மிகப்பெரிய கடல் அழிவு வருகின்றது.இந்த கடல் அழிவு ஏற்பட்டதாக பிளேட்டொ குறிப்பிடும் ஆண்டு அதாவது இன்றைக்கு அண்ணளவாக 11500 ஆண்டுகளுக்கு முன்னம் அதாவது எங்களது காலக்கணிப்பில் கி மு 9583 என அறியப்படுகின்றது. 

கி மு 9583 பின்னர் கடல் அழிவில் இருந்து தப்பி மீண்டுவந்து வளர்ச்சி அடைந்த குமரிக்கண்டத்தின் கிழக்குக்பக்கத்தில் வாழ்ந்த நாகலோகத்துக்கு மக்கள் தமிழ் மொழியை பாதுகாத்துவந்தார்கள். இவர்கள் காலப்போக்கில் ஒரு சிறந்த நாகரிக வளர்ச்சியை அடைந்திருந்தனர்.இவர்கள் தமிழ் மொழியை எழுத கண்டுபிடித்த எழுத்துவடிவம் "நாகரி" இந்த எழுத்துவடிவத்தில் தமிழ் இந்த உலகில் தொடர்ந்தும் 5000 ஆண்டுகளுக்கு மேல் எழுதப்பட்டுவந்தது.அண்ணளவாக கி மு 4000 அளவில் இந்த "நாகரி"என்ற எழுதுவடிவம் எம்மிடம் இருந்து திருடப்பட்டது.ஆதாவது எம்மிடம் இருந்து பிரிந்த ஒரு கலப்பு இனத்தவர் அந்த எழுதுவடிவத்தை தாங்கள் உருவாக்கிய ஒரு புதிய மொழியை எழுத பயன்படுத்த தொடங்கினார்கள்.அந்த நேரம் அரசியல் ஆளுமை அவர்கள் கைகளில் இருந்ததால் இந்த எழுத்துவடிவம் அவர்கள் உரிமையானது. 

மேலதிக தேடல்களோடு மொழியின் வரலாறு தொடரும் ,,,,,,,,, 
அதுவரை நன்றியுடன் 
சிவமேனகை ,,,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக