தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 22, 2018

9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?


9000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் முக உருவம் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏதென்ஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆய்வாளர்கள் சிலர், கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் உருவத்தை மறுசீரமைக்கும் பொருட்டு சில ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
அதற்கான எலும்புகளை அவர்கள் தேடியபோது கிரேகத்திலுள்ள குகை ஒன்றில் கடந்த 1993-ஆம் ஆண்டு கிடைத்த சில எலும்புகளின் உதவியோடு ஆய்வை துவக்கியுள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சம் அந்த எலும்புகள் ஒரு பெண்ணின் எலும்பு தான் என்பதை உறுதி செய்த ஆய்வாளர்கள், அந்த பெண் இறக்கும் போது அவருக்கு வயது 15 முதல் 20 வரை இருக்கலாம் என கணித்துள்ளனர்.
மட்டுமின்றி, குறித்த பெண்ணுக்கு டான் என பெயர் வைத்துள்ள ஆய்வாளர்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் மிருகங்களையே வேட்டையாடி சாப்பிட்டதால் இந்த முக அமைப்பு இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணின் முகத்தில் சிறிதளாவும் சிரிப்பு இல்லாதது தான் அனைவருக்கும் சற்று ஆச்சரியத்தையும் வியப்பையும் அளித்துள்ளது.
மேலும், டானுக்கு ரத்தசோகை இருந்திருக்கலாம் என்றும் ஸ்கர்வி எனப்படும் ஈறுகளில் ரத்தம் கசியும் பிரச்சனை மற்றும் எலும்பு பிரச்சனைகள் உள்ளிட்டவை இருந்திருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டானின் முகம் உருவம் தற்போது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://news.lankasri.com/othercountries/03/172520?ref=ls_d_world

No comments:

Post a Comment