தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

சகல தோஷங்களையும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு


எந்தவொரு காரியத்தை தொடங்கும் போது "பிள்ளையார் சுழி" இட்டு தொடங்கு வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள்.
பிள்ளையாரை வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது.

மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்கு கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்தி மரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்களாலும் விநாயகர் வடிவம் அமைத்து வழிபடுவது ஜீதிகமாகும்.

விநாயகர் சகல தோஷங்களையும் போக்க வல்லவர். விக்கினங்களை வேரோடு அறுக்க வல்லவர். விநாயகரை கீழ் கூறிப்பிட்டவாறு வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி விடும் என்பது ஐதீகம்.
  • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும்.
  • குங்குமத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகுவதாக ஐதீகம்.
  • பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
  • புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம் செழிப்பதுடன், உடல் நோய்கள் அகலுவதாகவும் நம்பிக்கை.
  • வெல்லம் மூலம் அமைக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால், உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் உருவாகும் கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் மறைந்து விடுவதாக ஐதீகம்.
  • உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை விலகி விடுவதாக நம்பிக்கை.
  • வெள்ளெருக்கு விநாயகரை வழிபாடு பில்லி, சூனிய பாதிப்புகளை தடுக்கிறது.
  • விபூதியால் பிடித்து வைத்து வழிபட்டால் நோய்கள் தீர்வதாக ஐதீகம்.
  • சந்தன பிள்ளையார் வழிபாடு காரணமாக புத்திர பாக்கியம் ஏற்படுவதாக நம்பிக்கை.
  • சர்க்கரை பிள்ளையார் செய்து வழிபட்டால் நீரிழிவு நோய் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்.
  • வாழைப்பழத்தில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படுவதாக நம்பிக்கை.
  • வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வியாபார கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைகளும் விலகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக