தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, February 5, 2018

தினமும் 30 நிமிடங்கள் நடப்பதில் இத்தனை நன்மைகள் உள்ளதா? ஆச்சரிய தகவல்!


ஒரு நாளில் வெறும் 30 நிமிடங்கள் நடப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மாறிவிட்ட இந்த நவீன உலகில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் நடப்பதைவிட சிறந்த உடற்பயிற்சி இருக்க முடியாது என பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகள்:


 • நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மனித உடலின் கெட்டக் கொழுப்புகள் கறையும்.
 • 30 நிமிடங்கள் நடப்பதால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு அஜீரண கோளாறுகள் நீங்கி உடலின் மெட்டபாலிச விகிதமும் அதிகரிக்கும்.
 • தினமும் அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடலில் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவித்து, எலும்புகள் பலம் பெற்று வலிமையாகவும் இருக்கும்.
 • நடைப்பயிற்சியின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.
 • நடைப்பயிற்சி மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை கூட்டுவதோடு, மூளைத் திசுக்களின் அளவு குறைவதைத் தடுத்து, நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும்.

 • தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். இதனால் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் ஆரோக்கியமானவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருக்கலாம் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  ஒருவர் அன்றாடம் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சியுடன், சரியான டயட்டையும் மேற்கொண்டால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் என்ஜாய் செய்து நீண்ட நாள் வாழ முடியும் என்பது நிச்சயம்.

  boldsky.com

  http://www.canadamirror.com/health/03/171279

  No comments:

  Post a Comment