தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 22, 2018

இலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது கண்டுபிடிப்பு…!


இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பழங்குடிகளாக வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கு மொழி பேசுபவர்கள் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.அதாவது, இலங்கையில் இருக்கும் ‘அகிகுந்தாசா’ என்ற பழங்குடிகள் தெலுங்கு மொழியையே பேசுகின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பல நூற்றாண்டுகளாக இலங்கையில் வாழ்ந்து வரும் இந்த ‘அகிகுந்தாசா’ பழங்குடிகள், சிறிது சிறிதாக அழிந்து வரும் இனமாக இருக்கின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே தற்போது வாழ்கின்றனர்.
இவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாம்பு பிடிப்பவர்களாகவும், அவற்றை வேடிக்கை காட்டி வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். அத்துடன் இலங்கையில் இவர்கள் தீண்டதகாதவர்களாகவும் நடத்தப்படுகின்றனர்.ஆந்திரபிரதேச கலாசார கமி‌ஷனின் தலைமை செயல் அதிகாரி இத்தகவலை தெரிவித்துள்ளார். இலங்கையை இறுதியாக ஆண்ட மன்னர் இவர்களை அங்கு அழைத்துச் சென்று இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.ஆந்திராவில் இருந்து விரைவில் ஒரு அதிகாரிகள் குழு இலங்கை செல்ல இருப்பதாகவும், அவர்கள் இப்பழங்குடியினரை சந்தித்து அவர்கள் பற்றிய மேலும் பல தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் ஆந்திர அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

http://www.canadamirror.com/srilanka/04/162812?ref=ls_d_canadamirror

No comments:

Post a Comment