தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 19 பிப்ரவரி, 2018

மழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணாடிப்பூ


மழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி பற்றி உங்களுக்கு தெரியுமா?
இதன் ஆங்கிலப் பெயர் 'ஸ்கெலிடன் ஃபிளவர்' (Skeleton Flower) , தாவரவியல் பெயர் 'டைபிலியா கிரேயி' (Diphelleia Grayi) , தாவரக் குடும்பம் 'பெர்பெரிடாசியே' (Berberidacea) ஆகும்.
ஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.
குளிர் நிறைந்த மலைப்பகுதிகளே இது வளர்வதற்கு ஏற்ற சூழலைத் தருகிறது.

கிழங்குகளில் இருந்து முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் இலை அகலமாக குடைபோல இருக்கும், ஒரு மீட்டர் அகலத்துக்கு இலைகள் பரவியிருக்கும்.
செடி 40 செ.மீ. உயரம் வரை வளரும். செடியின் நுனியில் கொத்தாக 6 மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தச் செடியின் பழங்கள் அடர் நீல நிறத்தில் இருக்கும்.

பூவின் இதழ்கள் மழையில் நனைந்தால் நிறமிழந்து கண்ணாடி போல ஆகி, பின் ஈரம் உலர்ந்த பின் மீண்டும் வெள்ளை நிறம் தோன்றும்.
நிறம் மறையும்போது, பூ இதழ்களின் நரம்பு அமைப்பு கண்ணாடிக்குள் தெரியும் மெல்லிய எலும்புகள் போலத் தெரிவதால் இதற்கு 'ஸ்கெலிடன் ஃபிளவர்' (Skeleton Flower) என்று பெயர்.
பூ இதழ்களின் செல்கள் நெருக்கமாக இல்லாமல் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இப்படி நிறமிழக்கக் காரணம்.

மழைக்காலங்களில் இந்தச் செடியின் பூக்கள் பனிக்கட்டியால் செய்ததுபோல மிக அழகாகக் காணப்படும்.
இந்தத் தன்மை காரணமாக, 'தாவரங்களில் பச்சோந்தி' (Chameleon of the Woods - கேமலியேன் ஆஃப் தி வுட்ஸ்) என்றும் இந்தச் செடி அழைக்கப்படுகிறது.


http://news.lankasri.com/education/03/172323?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக