மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவ ராத்திரி அல்லது பிரதோஷ நாட்கள் எனப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை சிவராத்திரி தினமாகக் கடைப்பிடிக்கிறோம்.
மகாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி.
ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தாக கருதப்படுகின்றது.
அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே நமது உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.
அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும் என சொல்லப்படுகின்றது.
சிவராத்திரி அன்று சிவன் கோயில்களில் சென்று உபவாசம் இருந்து சிவனை நோக்கி வழிபட்டால் நாம் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஜதீகம்.
சிவராத்திரி அன்று விரதம் இருப்போர் கடைபிடிக்க வேண்டியவை
சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.
அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் செல்லவது அவசியம் .
மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும்.
வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.
http://news.lankasri.com/spiritual/03/171862?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக