தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 23, 2018

உங்கள் ரசிக்கு இந்த ஆபத்து நிச்சயம் வரும்! ஜோதிடம் என்ன சொல்கின்றது தெரியுமா..?


ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த திகதி மற்றும் நேரம் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசிகள். ஒவ்வொரு ராசிகளும் ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில், வாழ்க்கை போன்றவற்றை மட்டும் கூறுவதில்லை.
ஒருவரது ஆரோக்கியத்தைக் குறித்தும் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளையும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் ஆளுகின்றன.
அதாவது ஒருவரது ராசியைக் கொண்டு, அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.
உங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
மேஷம்
மேஷ ராசியால் கண்கள், மூளை போன்றவை ஆளப்படுகிறது. இந்த ராசிக்கார்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டால், அது தலை மற்றும் முகத்தில் தான் இருக்கும்.
மேலும் இவர்கள் அடிக்கடி காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள்.
அதோடு இவர்கள் மிகவும் பதற்றமடைவார்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். இதிலிருந்து விடுபட இவர்கள் அன்றாடம் மனதை ரிலாக்ஸ் செய்யும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.
ரிஷபம்
தொண்டை, கீழ் தாடை, கழுத்து, காது, தைராய்டு மற்றும் இன்சுலின் உற்பத்தி போன்றவை ரிஷப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு தொண்டை மற்றும் உள் நாக்கு போன்றவற்றுடன், காது பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்படுவதால், உணவை ஆற்றலாக மாற்ற முடியாமல், இவர்கள் உடல் பருமனால் கஷ்டப்படுவார்கள்.
மிதுனம்
கைகள், தோள்பட்டை, நரம்பு மண்டலம், நுரையீரல், உதரவிதானம் மற்றும் இரத்த குழாய்கள் மிதுன ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் நரம்பு சம்பந்தப்பட் நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்களது அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால், பதட்டம் மற்றும் மனக் கவலையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதன் விளைவாக தலைவலி, ஒற்றைத் தலைவலி, அஜீரண கோளாறு மற்றும் தூக்கமின்மையாலும் அவஸ்தைப்படுவார்கள்.
கடகம்
மார்பகம், பெண் இனப்பெருக்க மண்டலம் மற்றும் வயிறு போன்றவை கடக ராசியால் ஆளப்படுகிறது. கடக ராசிக்காரர்க்ள அஜீரண கோளாறுகள், வயிற்றுப் போக்கு, மன அழுத்தம், அல்சர் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.
கடக ராசிப் பெண்கள் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை சந்திப்பதோடு, கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திப்பார்கள்.
சிம்மம்
இதயம் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது. அதோடு முதுகு மற்றும் தண்டுவடமும் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது.
இந்த ராசிக்காரர்கள் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல விஷயங்களை விரும்புவார்கள் மற்றும் எப்போதும் இவர்கள் அதிகமாக வேலையோ அல்லது விளையாடவோ செய்வார்கள்.
இதனால் கடுமையான முதுகு வலி, சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வர வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி சிறுகுடல், சிறுகுடலின் மேற்பகுதி மற்றும் மண்ணீரல் போன்றவை.
ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் அடிக்டிக வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வயிற்று அல்சர், அப்பெண்டிக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சாப்பிடும் விஷயத்தில் பாகுபாடு காட்ட வேண்டும்.
துலாம்
சிறுநீரகங்கள், அட்டீனல் சுரப்பிகள், அமிலம்/காரம் சமநிலை துலாம் ராசியால் ஆளப்படுகிறது.
இந்த ராசிக்காரர்கள் சிறுநீரகங்களில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற, அதிக நீரைக் குடிக்க வேண்டும். அப்படி குடிக்காவிட்டால், அது சரும பிரச்சனைகள், சிறுநீரக தொற்றுகள், உட்காயங்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
இனப்பெருக்க மண்டலம், புரோஸ்டேட் சுரப்பி, குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவை விருச்சிக ராசியால் ஆளப்படுகிறது.
இந்த ராசிப் பெண்கள் இனப்பெருக் மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகளவு உதிரப்போக்கு, பிஎம்எஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருப்பதால், அடிக்கடி சிறுசிறு நோய்த்தொற்றுகளால் அவஸ்தைப்படக்கூடும்.
தனுசு
இடுப்பு, தொடை, கல்லீரல் மற்றும் இடுப்புமூட்டுக்குரிய நரம்பு போன்றவை தனுசு ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதனால் விளையாடும் போது இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதோடு, உடல் பருமன் பிரச்சனையாலும் கஷ்டப்படுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்களின் உடலில் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். இந்த ராசிக்காரர்கள் அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடல் பருமன் பிரச்சனைத் தவிர்க்கலாம்.
மகரம்
எலும்புகள், மூட்டுகள், சருமம், நகம், பற்கள் மற்றும் முடி போன்றவை மகர ராசியால் ஆளப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் அடிக்கடி எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பார்கள். எலும்பு மற்றும் மூட்டுக்களில் கால்சியமேற்றலைத் தடுக்கவும், உடலின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் அடிக்கடி உடல் மசாஜ்களை செய்ய வேண்டியது அவசியம்.
கும்பம்
கால் முட்டி மற்றும் கணுக்கால், இரத்த ஓட்டம் போன்றவை கும்ப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சுருள்சிரை நரம்பு, இரத்த ஓட்ட பிரச்சனை மற்றும் இதய பிரச்சனை, கணுக்கால் சுளுக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த ராசிக்காரர்கள் போதிய ஓய்வு எடுக்காவிட்டால், இவர்களுக்கு ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
பாதங்கள், அடிவயிறு மற்றும் குடல் பகுதிகள் மீன ராசியால் ஆளப்படுகிறது. மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் இவர்கள் அதிகமாக டென்சன் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு மனம் வருந்தினால், அடிவயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இந்த ராசிக்காரர்களுக்கு பாத வலிகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் நல்ல காலணிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இவர்களுக்கு ஹை-ஹீல்ஸ் சரிப்படாது.

http://www.manithan.com/astrology/04/162887

No comments:

Post a Comment