தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 23, 2018

கை வருமா காதல் நிலவு-கவிதை


கை வருமா காதல் நிலவு
கட்டறுத்து அலையுது மனது
கண்ட நாள் முதலாய் அவள்
கண்களில் வீழ்ந்தே விட்டேன்

கயல்விழிக் கண்கள் தீண்டிட
செவ்விதழ் திறந்து
முத்துக்கள் ஜொலித்திட
தொலைந்து போனேன் நான்
தொடர்ந்து செல்கிறேன் அவள் பாதை

நால்வகைக் குணங்களும்
பொருந்திற்ற நங்கை
நாயகியாகி நீயும் என்
வாசல் வா மங்கை

பாலைவனம் எல்லாம்
பசுமையாக்கி வைத்து
சோலைக் குயிலாகி எந்தன்
சொந்தம் சொல்லிப் பாடு

கானமயில் நீயும்
தோகை விரித்தாடு
காளை நெஞ்சம் சிரிக்க
கை கோர்க்குமா நிலவு


Vinod AR

No comments:

Post a Comment