04.02.2049-17.02.2018-தமிழ்மொழி சமசுகிருதத்தை விடவும் பழமையானது தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என மாணவர்களிடையே மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (டெல்லி) டால்கோட்ரா விளையாட்டரங்கில் தேர்வு பயத்தை போக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டார். காணொளி மூலம் பிரதமருடன் உரையாட நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ-மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்ததுடன் மன அழுத்தத்தை வென்று, தேர்வுகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி உரையாற்றி வருகிறார்.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடையே மொழிப்பிரச்சனையால் சரியாக உரையாட முடியாமல் போனதற்க்கு வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். “மொழி தடையால் தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
அப்போது அவர், ‘‘நாட்டின் பிரதமராக இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. உங்களில் ஒருவராகக் கலந்து கொண்டுள்ளேன். மாணவர்கள் என்னை நண்பர்களாக எண்ணி கேள்வி கேட்க வேண்டும். தேர்வு பயத்தை போக்குவது மிகவும் அவசியமானது’’ எனக் கூறினார்.
அப்போது நாட்டின் மிகவும் மிக தொன்மையான மொழி எது என மாணவர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி. அதுமட்டுமின்றி உச்சரிப்பதற்கு மிகவும் அழகான மொழி. ஆனால் அந்த மொழியில் என்னால் வணக்கம் மட்டும்தான் சொல்ல முடியும். அதற்கு மேல் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். உதாரணமாக தமிழ். தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறைய பேருக்கு தெரியாது. நிறைய அழகுகளை தன்னகத்தே கொண்டது தமிழ் மொழியாகும். தமிழ் கற்றுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது ” என மோடி மாணவர்களிடையே பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக