தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 21, 2018

முதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம்: கேரள முஸ்லிம் நபரின் செயல்


கேரளாவில் சிவன் கோவிலுக்கு குளம் அமைக்க முஸ்லிம் நபர் ஒருவர் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் காலிக்கவில் எனும் ஊரில் நூற்றாண்டு பழமையான சிவன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு அருகே Nambiarthodi Ali என்பவருக்கு சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்ளது, கோயில் என்றால் பக்தர்களுக்கு உதவும்வகையில் நீராதாரமாக குளம் ஒன்று இருப்பது மரபு ஆகும்.
எனவே இந்த கோயிலுக்கு அருகில் உள்ள நிலத்தில் ஒரு குளம் அமைக்க இடம் வேண்டி Nambiarthodi Ali-யிடம் கோவில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர், நிலத்தின் மதிப்புக்கு உரிய பணமும் கோவில் நிர்வாகம் வழங்குவதாக தெரிவித்தனர்.
இருந்தபோதும் பணம் ஏதும் வாங்காமல் தனது நிலத்தில் குளம் அமைக்க தேவையான நிலத்தை சிவன் கோவிலுக்கு தானமாக அளிப்பதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து பேசிய Nambiarthodi Ali, நான் கோயிலுக்கு நிலம் நன்கொடை அளித்துள்ளேன், என்னால் முடிந்த உதவியை அந்த கோவிலுக்கு செய்து உள்ளேன்.
இதுபற்றி மசூதியில் உள்ள எங்கள் குருவிடமும் என் குடும்ப உறுப்பினர்களிடம் நான் சொன்னபோது, எனது இந்த முடிவுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர், முதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம். இது அல்லாஹ்வின் நிலமாக இருந்தாலும் அல்லது கிருஷ்ணரின் நிலமாக இருந்தாலும் எனக்கு இரண்டும் என்று தான் என தெரிவித்துள்ளார்.
45 சென்ட் நிலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது, இதைவிட 4 சென்ட் குறைவான நிலத்தை அதாவது 41 சென்ட் நிலத்தை Nambiarthodi Ali நன்கொடையாக அளித்துள்ளார்.
கோயில் நிர்வாகத்தை சேர்ந்த TNM சிவசங்கரன் பேசும் போது, நாங்கள் இந்த நிலத்துக்கு விலை கொடுக்க முடிவு செய்தோம். அந்த நிலத்தின் மதிப்பீடு அந்த பகுதியில் ஒரு சென்ட் 25,000 ரூபாய் ஆகும், ஆனால் அவர் எங்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக இவை அனைத்தையும் நன்கொடையாக கொடுத்தார் என்று கூறினார்.

http://news.lankasri.com/india/03/172428?ref=ls_d_india

No comments:

Post a Comment