அமெரிக்காவில் உள்ள மூன்று பிரபல பல்கலைகழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வின் முடிவில், பூமியானது ஒரு புதிய அழிவு காலத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த Stanford, Princeton மற்றும் Berkeley பல்கலைகழங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அதில், பூமியானது ஒரு மிக மோசமான அழிவை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருப்பதால் மனிதர்கள் மற்றும் முதுகெலும்பு உள்ள விலங்குகள் தான் இந்த அழிவிற்கு பலியாகும் முதல் உயிரினங்கள் என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
அதவாது காணாமல் போகும் அல்லது மரணமடையும் முதுகெலும்புள்ள விலங்குகளின் சராசரி விகிதமானது கடந்த ஆண்டுகளை விட 114 முறை மிக அதிக அளவில் அதிகரித்து செல்கிறது.
இந்த அதிகரிப்பின் மூலம் பேரழிவு ஏற்படுத்தும் ஆறாவது காலத்திற்குள் பூமியானது தற்போது நுழைந்துள்ளது.
இதுபோன்ற ஒரு பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியை ஒரு எரிக்கல் தாக்கி டைனோசர்கள் இறந்த காலத்தில் தான் நிகழ்ந்துள்ளது.
அதுபோன்ற ஒரு பேரழிவு ஏற்படுத்தும் காலகட்டத்திற்குள் தான் தற்போது பூமி நுழைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இது குறித்து பேசிய Gerardo Ceballos என்ற விஞ்ஞானி, இந்த பேரழிவு நிகழ அனுமதித்தால், பூமியில் மீண்டும் உயிரனங்கள் தோன்ற பல மில்லியன் வருடங்கள் ஆகும் என எச்சரித்துள்ளார்.
இந்த ஆய்வானது, காணாமல் போனதாக அல்லது மரணமடைந்ததாக கருதப்படும் விலங்குகளின் படிமங்களை சேகரித்து அதனை நன்கு ஆராய்ந்த பின்னர் விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
அதாவது, இதுவரை பூமியில் நிகழாத அளவிற்கு முதுகெலும்பு விலங்குகள் காணாமல் போவதென்பது மிகவும் அபாயகரமானது.
கடந்த 1900ம் ஆண்டுகளுக்குள் சுமார் 400 வகையான முதுகெலும்பு விலங்குகள் பூமியை விட்டு காணாமல்போயுள்ளது.
இவ்வளவு பெரிய இழப்பு என்பது பூமியில் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இழப்பாகும். ஆனால், ஒரு நூற்றாண்டுலேயே 400 முதுகெலும்பு விலங்குகள் காணாமல் போயுள்ளது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கால நிலை மாற்றம், மோசமான சுற்றுச்சூழல், காடுகளை அழித்தல் உள்ளிட்டவைகள் தான் இந்த அழிவு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணங்களாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அழிவுன் முதல் படியாக, அடுத்த மூன்று தலைமுறை ஆண்டுகளுக்குள் தேனீக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுப்படுவது முற்றிலுமாக முடங்கிவதுடன் அடுத்த சில ஆண்டுகளில் தேனீக்கள் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது.
ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த Paul Ehrlich என்ற விஞ்ஞானி கூறுகையில், தற்போதை காலத்திலும் அதிக அளவிலான விலங்கினங்கள் ‘நடை பிணங்களாக’ சுற்றி திரிவதை உதாரணமாக காட்ட முடியும் என்றார்.
41 சதவிகித நீர்நில வாழ் உயிரினங்கள் மற்றும் 25 சதவிகித பாலூட்டிகள் இந்த அழிவிற்கு பழியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் ஒன்றுப்பட்டு நீர்நிலைகள், வானிலை மாற்றம், சுற்றுச்சூழலை தீவிரமாக பாதுகாத்து வந்தால், இந்த பேரழிவிலிருந்து மனித இனத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக