வாகனங்களில் மிகவும் வேகமாக பயணிக்கும் போது வீதியில் போடப்பட்டுள்ள வேகத்தடுப்புக்களை கடப்பதற்கு போதியளவு கட்டுப்பாடு இல்லாமையினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை உணர்ந்த Hyundai நிறுவனம் இவ்வாறான வேகத்தடுப்புக்கள் இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் முறைமையை உருவாக்கியுள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தினை குறைத்து பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
கமெரா, GPS, சென்சார் என்பவற்றினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முறைமையின் ஊடாக இரவு நேரங்களிலும் வேகத் தடுப்புக்களை துல்லியமாக இனம்கண்டு பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக