தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 ஜூன், 2015

அமெரிக்க புழுக்களுக்கு அறிவாற்றல் வந்ததா ? விஞ்ஞானிகள் ஆடிப்போனார்கள்


அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரு , அதிசயம் நடந்து வருகிறது. இதனைப் பார்த்து விஞ்ஞானிகள் கூட ஆடிப்போய். வாய் பேசமுடியாமல் உள்ளார்கள். அது என்னவென்றால் ஏத்-வேர்ம்ஸ் என்று அழைக்கப்படும் மண் புழுக்கள், தார் வீதியில் வந்து வட்ட வடிவில் நிலைகொள்கிறது. அட இதில் என்ன அதிசையம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். தார் வீதியில் நடுவில் மஞ்சல் நிறக் கோடு போடப்பட்டுள்ளது. அந்த 2 மஞ்சல் நிறக் கோடுகளுக்கு உள்ளே தான் இவை கூடுகிறது. மேலும் இந்த மண் புழுக்கள் வட்ட வடிவில் கூடி , ஒரு வகையான கழிவுப் பொருளையும் வெளிவிடுகிறது.
ரெக்ஸஸ் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னர் தான் கடும் , சூறாவளி காற்று தாக்கியது. இதன் பின்னரே இந்த மண் புழுக்கள் இவ்வாறு நடந்துகொள்கிறது என்று கூறப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல , அந்த மாநிலத்தில் உள்ள பல நெடுஞ்சாலைகளில் உள்ள மஞ்சல் கோடுகளுக்கு மத்தியில் இவ்வாறு மண் புழுக்கள் ஏராளமாக வட்ட வடிவில் காணப்படுகிறது. இவை ஏன் இவ்வாறு செய்கிறது. அப்படி துல்லியமாக இவை செயல்பட்டு மஞ்சல் கோட்டுக்கு மத்தியில் செல்ல என்ன காரணம் ? இதற்கான அறிவு எங்கே இருந்து வந்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக