தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூன், 2015

கருங்கல்லில் கடவுள் ஏன் இருக்க முடியாது..?

 (தவத்திரு குன்றக்குடி அடிகளார்)
சைவ சித்தாந்ததில் உருவ வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் உருவம் இல்லாத ஒன்றையும் நம்மால் நினைக்க முடியாது. நாம் ஒன்றை நினைக்க வேண்டும் என்றால் அதற்கு உருவம் வேண்டும். உருவம் இல்லாத ஒன்றை நினைப்பது மிகக்கடினம். எனவே எமது மக்கள் வாழ்க்கையில் ஆண்டவனை வழிபட உருவம் தேவைப்பட்டது. அதன்படி உருவங்களுடன் ஆலயங்களும் எழுப்பப்பட்டன உலகம் முழுவதும் நிறைந்துள்ள ஆண்டவனை வணங்குவதற்கு நமக்கு ஏன் ஆலயங்கள். அவசிமானவை என்று நாம் அறிந்து கொள்வது மிகமிக முக்கிய மானதாகும்.

ஆண்டவனை நாம் எந்த இடத்தில் இருந்து கொண்டும் வழிபாடு செய்ய முடியும்.என்றாலும் அதற்கு இயல்பாக சில தடைகள் இருக்கின்றன.
வியாபாரத்தலம் ஒன்று இருக்கின்றது. எந்த நேரமும் அங்கே பொய்யும் புரட்டும் நிறைந்தபடியே இருக்கும். இலாபநட்ட கணக்கு பார்க்கும் இடம்தான் அது. எவருக்கும் பணத்தைப் பறிய சிந்தனையே ஓடிக்கொண்டி ருக்கும். அங்கு கடவுள் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை.

பக்தியைத் தேடும் இடம் கோவில்களே.

இன்னும் சற்று விரிவாக ஆராயப் போவோமானால் காற்று எங்கும் இருக்கிறது. காற்று இல்லாமல் நாம் ஒரு நிமிடம்கூட வாழ முடியாது. காற்றைப் போலவே கடவுளும் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மையாகும். நாம் சில நேரங்களில் காற்றில்லை காற்றில்லை என்று அவதிப்படுகின்றோம். உண்மையில் காற்றில்லை என்று அர்த்தமா? காற்றில்லாவிட்டால் நாம் ஒருநிமிட நேரம் கூட உயிர் வாழ முடியாதே. இதன் அர்த்தம் என்ன.? காற்று இருக்கவே இருக்கத்தான் செய்கிறது. நம் உடம்பால் செவ்வனே அதை அனுபவிக்க முடிவதில்லை. உடனே காற்றை நாம் அனுபவிப்பதற்கு காற்றாடியின் உதவியை நாடுகின்றோம். விசிறியினுடைய உதவிகொண்டு காற்றினது தன்மையை நாம் அனுபவிக்க முடிகின்றது.. ஆண்டவனும் காற்றைப்போல எங்கும் நிறைந்துதான் இருக்கின்றான். என்றாலும் நாம் அவனை உணர்ந்து கொள்வதற்கு அந்த வசிறியைப் போல ஆலயங்கள் உதவி புரிகின்றன. உலக வாழ்வு பொன்னால் இபொருளால், போகத்தால்,போட்டி பொறாமைகளால் வெப்பமாகி இருக்கின்றது. இந்த வெப்ப நிலையால் நாம் ஆண்டவனைக் காண முடிவதில்லை. இதனால் தெய்வம் இல்லை என்று அர்த்தம் இல்லை. இந்த வெப்ப நிலையில்தான் ஆலயங்கள் விசிறியைப் போல நமக்கு தீர்த்து வைக்கின்றன.

பக்தி நிலையை துhண்டுகின்ற சக்தி திருக்கோவில்களுக்கு உண்டு. கடைவீதிக்கு எப்படிப் பொருட்களைத் தேடி போகின்றோமோ அப்படியே பக்தியைத் தேடி கோவில்களுக்கு செல்லவேண்டும். அது அதற்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலைமாறி இன்றைய திருக் கோவில்கள் போட்டி, பொறாமை, பூசல் களுக்கிடையே சிக்கிய நிலையில் வழிபடுவோருக்கும் தெய்வத்துக்கும் இடையில் பெரிய இடவெளியை ஏற்படுத்தி யாருக்கு காளாஞ்சி யாருக்கு மாலை என்ற சஞ்சலத்தை கொடுக்கும் செயல்களைத்தான் காணமுடிகின்றது. இது வருத்தப்பட வேண்டியவிடயமாகும்.

கருங்கல்லில் கடவுளைக் காணலாம்.:

ஆலயங்களில் நாம் கடவுளைக் காணும் மார்க்கம் என்ன.? கருங்கல்லில் நாம் கடவுளைக் காணலாமா..? என்று இன்றைய இளைஞர்கள் கேட்கிறார்கள். சடப் பொருட்களையெல்லாம் மனிதன் தனது சக்தியைக் கொண்டு பாட, ஆட, ஓட வைக்கின்றானே. சடப் பொருட்களில் இந்த நிலை சாத்தியமாக இருக்கும்போது ஏன் மனிதன் சடப்பொருளான கல்லில் மட்டும் ஒருசக்தியை காண முடியாது என்று கேட்க விரும்புகிறேன். கோவில் வழிபாட்டில் நமக்கு இறுக்கமான நம்பிக்கை வேண்டும். அது மிக முக்கியமானதாகும். பண்பட்ட சைவ நெறியை அனைவரும் போற்றிக் காப்பாற்ற வேண்டும். இது எனது வேண்டுகோளாகும். இன்றைய விஞ்ஞானம் இருக்கிறதே அது கடவுள் தன்மைக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் மாறுபட்டதல்ல. ஆகர்ண சக்தி இருக்கிறதே அதைக் கண்டு பிடித்தவன் விஞ்ஞானி. நீரில் உள்ள மின்சாரத்தை விஞ்ஞானி காண்கின்றான். நீரில் மின்சாரத்தை பொருத்திய ஒருவரின் மூலதனம்தான் அந்த விஞ்ஞானியின் மூளைக்குப் புலப்பட்டது.

விஞ்ஞானத்தின் தாய்தான் மெஞ்ஞானம்

விஞ்ஞானியுடைய மூளையை சிருஸ்டித்த மூலம்பொருள் எது? இறைவனுடைய மூலப்பொருளை வைத்தே விஞ்ஞானி வியாபாரம் செய்கின்றான்.. இறைவன்தான் அனைத்துக்கும் மூலகர்த்தா. விஞ்ஞானத்தின் தாய் போன்றது மெஞ்ஞானம்.. விஞ்ஞான உலகம் மெஞ்ஞானத்தை புறம் தள்ளுமானால் அது தாயைப் புறம்தள்ளிய நிலையாகும்.
அப்பர, சுந்தர, சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நமது சைவப் பேரறிஞர்கள் விஞ்ஞான வாழ்வை அறிந்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் ஆராச்சி செய்யவில்லை. விபரீத வாழ்வை அவர்கள் விரும்பாததே அதற்கு காரணமாகும். இறுதியாக நான் சொல்லக் கூடியது ஒன்றுதான். சைவ சித்தாந்தத்துக்கு நிகரான ஒரு நெறி உலகத்திலே வேறு எங்கும் கிடைக்காது. இதை நாம் பூரணமாக அறிந்து கொள்ள வேண்டும். இறைவனை அடைவதற்கு மிக சுலபமான வழிதான் சைவசித்தாந்தம்.அதன் மூலம் நாம் இறைவனை அடைந்து பேரின்ப வாழ்வை எய்தலாம்.

ஓப்புவிக்காத வரையில்..:

எந்தப்பெரிய அதிகாரியாக இருந்த போதிலும். நாம் நமது தலையைப் பூரணமாக ஒப்புவிக்காத வரையில் முடியை வெட்டிக்கொள்ள முடியாது. முடியை வெட்டிக் கொள்வதற்கு முதலில் தலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது. அதுபோலவே நம்மை இறைவனிடம் பூரணமாக ஒப்படைத்தால்தான் அவன் கருணையை பெறமுடியும் என்பதை உள்ளத்தில் உணர்ந்து. நம்மை பூரணமாக ஒனிடம் ஒப்புவிக்காதவரை நாம் இறைவனை ஆடைவது முடியாத காரியம். இதுதான் சைவசித்தாதந்தின் உட்பொருளாகும்

உங்களுக்கும் நல்லதாய் , எனக்கும் நல்லதாய்
நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன்
================================
முடிசார்ந்தமன்னரும்முடிவில
பிடிசாம்பல்என்பதைமறவாதிருமனமே

சாய் பாலாஜி!

கருங்கல்லில் கடவுள் ஏன் இருக்க முடியாது..?
=======June 09 2015========= 05.26 PM==========

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக