தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஜூன், 2015

இலங்கையில் மிக உயரமான மனிதராகக் கருதப்படும் அவர் உயரம் 7 அடி 3அங்குலம்!

முன்னாள் போராளியின் உயரம் தெரியுமா..?
குணசிங்கம் கஜேந்திரன் என்ற இந்த முன்னாள் போராளியின் உயரம் 7 அடி 3 அங்குலமாகும். இவர் 2009 மே 17ம் நாள் இராணுவத்தினரிடம் சரணடைந்து பூசா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான கஜேந்திரன், சாவகச்சேரியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 6 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இலங்கையில் மிக உயரமான மனிதராகக் கருதப்படும் அவர், தனது உயரத்தினால் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
“ஏனையோரைப் போல பேரூந்துகளில் பயணிக்க முடியவில்லை. சாதாரணமாக வீடுகளில் உள்ள கதவுகள் வழியாக கடந்து செல்ல முடியவில்லை. குனிந்து கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
உடல்நல ரீதியாகவும் இந்த உயரத்தினால் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக நேரம் நிற்கவோ, நடக்கவோ, அமர்ந்திருக்கவோ முடியவில்லை. வெளியே செல்லும் போது மற்றவர்கள் நிமிர்ந்து பார்ப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்த உயரம் தனக்கு சிலவேளைகளில் உதவியாக அமைவதாகவும் கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக வீடுகளில் மின்குமிழ்களை மாற்றுவதற்குக் கூட மற்றவர்கள் உயரமான ஒரு பொருளைத்தேட வேண்டியுள்ளது.
ஆனால் தனக்கு அவ்வாறு உயரமான பொருளை வைக்காமலேயே மின்குமிழ்களை மாற்ற முடிவதாக அவர் கூறுகிறார்.ltte 01 ltte
- See more at: http://www.asrilanka.com/2015/06/16/29186#sthash.9Yqv8ZLC.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக