தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 அக்டோபர், 2013

பழங்காலத்தவர்கள் கோள்களை எப்படிக் கண்டுபிடித்தனர்?


வானத்தில் விண்மீன்கள் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடத்தில் காட்சியளிப்பவை. விண்மீன்களைப் போன்றே தோற்றமளிக்கும் சில விண்பொருள்கள் (நகரும் விண்மீன்கள்) ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வதைக் கண்டனர். அவற்றைக் கோள்கள்(கிரகங்கள்) எனப் பெயரிட்டழைத்தனர். இந்த நகரும் விண்மீன்கள் பொதுவான விண்மீன்களைக் காட்டிலும் சற்று பெரியவையாகக் காட்சியளிப்பதால் அவற்றை ஆண்டுக்கணக்கில் உற்றுநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தன. மற்ற விண்மீன்களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்தான். எனினும் புவி சூரியனைச் சுற்றுவதால் புவியிலிருந்து பார்க்கும் போது சூரியன் ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வது போன்று தோன்றுவதால் சூரியனையும் ஒரு கோள் என்றனர். சந்திரன் புவியின் துணைக்கோள் என்றாலும் அதுவும் புவியிலிருந்து நோக்கும்போது இடம்பெயரும் விண்போருள் என்பதால் அதனையும் கோள் என்றனர். ஆக கண்ணுக்குத் தெரிந்த இடம்பெயரும் விண்பொருள்களைக் கோள்கள் (கிரகங்கள்) என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக