தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 அக்டோபர், 2013

அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும் !


தமிழ் மண்ணில் அண்மைக் காலமாய் கிடைத்து வரும் பல்வேறு கற்கருவிகள் , பழந்தமிழ் எழுத்துக்கள் மற்றும் தொல்லியல் அகழாய்வு பொருட்களால் இந்தியாவின் ஒட்டு மொத்த வரலாற்றையும் மறு ஆய்விற்கு உட்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது . சமற்கிருத மொழியின் பின்னணியிலிருந்து ஆய்வு நடத்திய ஆய்வாளர்கள் அனைவரும் இப்ப்போது தமிழின் பழமையிலிருந்து தங்கள் மொழியில் , பண்பாட்டியல் , சமூகவியல் ஆய்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .அகழாய்வு மேற்கொண்டால் இந்திய வரலாறு கோணலாகும் என்பதை நன்கு உணர்ந்த இந்திய அரசு எக்காலத்திலும்
நம் சிறப்பை எடுத்துரைக்க உதவாமல் போனாலும் உண்மை வெளியாகவேண்டிய சூழ்நிலை விரைவில் உருவாகும் .

அ) கடந்த 2004ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூரில் நடத்தபட்ட் அகழாய்வு .

ஆ) ஆண்டிபட்டிக்கு அருகில் உள்ள புள்ளிமான் கோம்பையில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கூடிய நடுகல் கண்டெடுப்பு .

இ) மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கிடைத்த கற்கோடரி .

ஈ) சென்னை அருகே உள்ள பல்லாவரம் பகுதியில் அமைந்து உள்ள மலையில் சுமார் 10 இலக்கம் ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு கற்கோடரி தொழிற்சாலை அமைந்துள்ளது என்பது வட இந்திய
ஆய்வாளர்களுக்கு பீதி ஏற்படவைத்துள்ளது .

உ) பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் அகழாய்வு . மேற்காணும் நான்கு நிகழ்வுகளும் தமிழ் மொழியின் பழமையை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது .

ஊ ) இதுவரை மொத்த இந்தியாவில் கிடைக்கப்பட்ட தொல்லியல் சம்பந்தமான பொருட்களில் சுமார் 69% விழுக்காடு தமிழர்களுடையது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .இந்த செய்தியையும் இவர்கள் மறைத்துவிட்டார்கள் என்பது வேதனை .

என்னதான் தமிழின அடையாளத்தை அழித்தொழிக்க பலர் பாடுபட்டாலும் தோண்டும் இடமெல்லாம் தமிழர்களின் அடையாளங்களாய் இருகின்றதே பாவம் என்ன செய்வீரோ ( ஹிந்தியி அரசு , திராவிட அரசு ) இன்னும் எத்தனை காலங்களுக்கு .

இப்படிக்கு ,
தமிழ்-தமிழர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக