தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 6, 2013

பெற்றவரா காதலரா-வாழக்கையில் யார் மிக முக்கியம்?

Krishnan Balaa 
முகநூல் நண்பர்களே,நண்பிகளே,
நீங்கள் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்றால்,’ காதல் சரியானதுதான்’ என்று எண்ணிக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் எழுதுவது உங்கள் எழுத்துரிமை;கருத்துரிமை என்ற கணக்கில் பிதற்றாதீர்கள்.

அது நிச்சயம் உங்கள் மனச்சாட்சிக்கு எதிரானது. உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குக் கேடு விளைவிப்பது.

மனச் சாட்சிக்கு எதிராக எழுதுவதை ஒரு ஃபேஷன் என்பதாகவும் புர்ரட்சீகரச் சிந்தனை என்பதாகவும் எண்ணிக் கொண்டு இங்கே திரிகிறவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கப்போட்டி போடாதீர்கள்.

’செய்த தவறுகளைத் தவறுதான்’ என்றுணர்ந்து தமிழ்ச் சமூகத்துக்கு அதற்கே உரிய பண்புகளையும் பயனுள்ள மேன்மைச் சிந்தனைகளையும் விதைக்க கணினியில் உங்கள் விரல்களையும் வித்தைகளையும் பயன் படுத்துங்கள்.

ஒரு வேளை ’உங்களுக்குக் கிடைத்த இளிச்சவாயக் கணவன் போலவும் ஏமாந்த மனைவி போலவும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைப்பார்கள்’ என்று எண்ணி உங்கள் காம உறவுகளில் விளைந்த கல்யாணச் சந்தோஷத்தை ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்’ என்று தாயுமானவர் வழியில் சமூக வலைத்தனங்களில் போதிப்பது தற்குறித்தனம்’ என்பேன்.

நீங்கள் பெற்ற கல்வி எவ்வளவு விரிந்தது என்றாலும் அவை வெறும் காகிதப் பட்டங்களே.


Panchalingam Sribalan

அருமை அருமை,சிந்தித்தால் இதுதான் உண்மை,காதல் என்பது காமம் பிறந்ததால் பருவமடைந்ததால் வருவது!அதற்காக பால் குடித்த மடியை கடித்துக்குதறி தனக்காக எத்தனை தடவை இரவுகளை உறங்காது கழித்த உறவை மறந்து தனக்காக அழுது சிரித்து அறிவு தந்த உறவின் கனவை நம்பிக்கையை நொறுக்கி சில நாட்கள் பழகிய குடும்பம்,குணம்,குலம் எதுமே தெரியாத ஒருவருக்காக செல்வது நம்பிக்கைத்துரோகம் மட்டுமல்ல!நாளை அனுபவிக்கப்போகும் துன்பமுமே!!

தவறி காதல் வந்தால் அது உண்மையானதாக கௌரவமானதாக இருந்தால் பெற்றோருடன் பேசுங்கள்,பொறுத்திருந்து காத்திருந்து உங்கள் காதலின் உண்மையை காட்டுங்கள்!அது சாகும் வரையாக இருந்தாலும் மாறாது என்று காட்டுங்கள்(அன்பான கணவன் சில பிள்ளைகளை கொடுத்து தவறினாலே மறுமணம் தேடும் இன்றைய உலகில் உண்மைக்காதல்!!)உங்கள் பெற்றோர் உங்களை அறிவார்கள்,நீங்கள் பிறந்ததில் இருந்து உங்கள் இன்ப துன்பம்,பிடிவாதம்,நோய் என்று அனைத்தையும் உங்களுடன் அனுபவித்த அவர்கள் உங்களுக்கு கெடுதலா செய்வார்கள்!!(சகோதரம் செய்யும்,காரணம் சுயநலம்)உங்கள் காதலுக்குரியவர் உங்களுக்கு ஏற்றவர் என்பதை அனுபவசாலியான அவர்கள் அறிந்ததும் ஏற்பார்கள்,ஏற்காவிட்டால் ஏற்றவர் அல்ல என்பதே உண்மை!
நண்பரின் உசுப்பேத்தல் காதல் அல்ல!எதிகால நாசம்!

உங்களை பெற்றவர் உங்களையே தங்கள் எதிர்காலமாக நினைத்து தங்கள் நிகழ்காலம் தொலைத்தவர்!மறந்தால் உங்களுக்கு எப்பிறப்பிலும் மன்னிப்பில்லை!!நீங்கள் முரண்டு பிடிக்கையில் அவர்கள் அனைத்தும் உள்ளவர்கள் முரண்டு பண்ணமாட்டார்களா??!!அன்பாக பணிவாக அணுகுங்கள்!!அவர்கள் கற்பனையை கலைக்காதீர்கள்!அவர்கள் அன்று தங்களுக்காக வாழ்ந்திருந்தால் இன்று நீங்கள் இங்கு இல்லை!அறிவு கெட்ட வியாபார நோக்கம் கொண்ட சினிமா,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பண்பாட்டை,கலாச்சாரத்தை நாசமாக்கி தமிழை,தமிழனத்தை தங்கள் போலாக்க வந்த பின்தங்கிய இனத்தோர் (தெலுங்கு,மலையாளி...)மிருகங்கள் போல ஆளை மாற்றும் வெள்ளை,ஐரோப்பியர் செய்யும் சதிவேலைகளாகும்!!

படித்தால் அறிவு வளரும் என்பதை உங்கள் பாதைகள் பகுத்தறிவாளருக்கு நிரூபிக்கட்டும்!!

வாழ்க தமிழ்!ஓங்குக தமிழ்ப்பண்பாடு,கலாச்சாரம்!

வீழ்க அந்நியர் கொட்டம்!!

No comments:

Post a Comment