தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

தமிழீழப்பெண்ணுக்கு கனடாவில் அழகிப் பட்டம் !!


கனடாவின் பதின்மப் பிராய அழகியாக (Miss Teen canada) தமிழீழத்தின் வவுனியா பகுதியை பூர்வீகமாக கொண்ட அபிஷேகா லொயிட்சன் கிரீடம் சூட்டப்பட்டுள்ளார்.

ஒன்ட்ரியோவின் ரிச்மண்ட் ஹில்லில் அண்மையில் இடம் பெற்ற விழாவில் 2013/2014 பதின்ம பிராய அழகி என பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.

மார்க்கம் பகுதியில் உள்ள அந்திரே கத்தோலிக்க உயர் நிலைப் பாடசாலை மாணவியான அபிஷேகா (17வயது) கல்வி நடைவடிக்கைகளுக்கும் மேலாக இதர பல திறமைகளைக் கொண்டவர்.

கர்நாடக சங்கீதம், விளையாட்டு துறைகள் உள்ளிட்ட பல்வேறு திறமைகளைக் கொண்டவராக அபிஷேகா திகழ்கின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பெற்றோருக்கு கனடாவில் பிறந்தவரே அபிசேகா எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பெண்களை விட வவுனியாப் பெண்களுக்கு அது கொஞ்சம் அதிகம்தான்!இனி என்ன கோலிவுட்,இந்தியா என்று படங்களில் நடித்து நாட்டின் புகழை நிலை நாட்டுங்க!!

ஆனால் என்ன சாதனை செய்தார் என்பதே என் கேள்வி???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக