தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 அக்டோபர், 2013

எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்கு காரணம் சிவப் பலக் குறைவே!!

இதை படிக்க தவறினால் நீங்களும் தவறு செய்கிறீர்கள்... தயவு செய்து படிக்கக்கவும்.....
ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!
தமிழீழ அரசாங்கம்-முப் படைவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகலிடம் இருந்தும் எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக. அமைந்ததுசிவப் பலமே

தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். சிவபெருமான் திருவருளால் இவ்வுலகே உய்யும். .
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி
சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
“நாமார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”
இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார்.
‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’
இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.
“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன்
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”
இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.
தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?
“கடுஞ்சினத்த கொல் களிறும்
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள்.
“பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”
என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.
இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.
தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?
சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான்.
முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் கப்பல் படை.
இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி-இந்தோனேசியா- அந்தமான்- மற்றும் நிகோபார் தீவுகள்,- இலட்சத்தீவுகள்-, சுமத்ரா-, ஜாவா-, மலேயா- மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான்.

தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர்.
14ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள், பின் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 1650ஆம் ஆண்டு வரை ஆண்டதற்கு சான்றுகள் உள்ளன...அவர்களை 'தென்காசிப் பாண்டியர்கள்' என்று கூறுவர்.
இந்த செய்தி இப்பொழுது வரை 'தென்காசிப் பாண்டியர்கள்' பற்றி வெளியில் வரக்கூட இல்லை...எல்லாம் நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி...பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வரலாறு தெரியவே தெரியாது... அப்பொழுதே தமிழர்களைப் பிரித்தாளும் சதி செய்ய தொடங்கிவிட்டனர்.

இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.

தமிழீழ அரசாங்கம்-முப் படைவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகலிடம் இருந்தும் எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக. அமைந்ததுசிவப் பலமே

இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும்.


!சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்--- துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்
தமிழால் சாதித்தோம் ! தமிழால் சாதிப்போம் !!
தமிழா சாதித்தோம் ! தமிழா சாதிப்போம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத சைவ தமிழென்று சங்கே முழங்கு.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழியசெந்தமிழ் திருநாடு!!!

link--http://arulakam.wordpress.com/

நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே
HTTP://ARULAKAM.WORDPRESS.COM/இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக