"அறிவாளி போல் போல் பேசும் நீ....!
கவலைப்பட வேண்டாததற்காக கவலைப்படுகிறாய்..!
அறிஞர் வாழ்பவர்களுக்காவோ.., மாண்டவர்களுக்காகவோ..,
வருந்துவது இல்லை..!"
-ஸ்ரீ கிருஷ்ண பகவான்.
Kokulan Selvanathan மாயை மனிதரை இலகுவாக விட்டு விட்டு அகல மாட்டாது
Thapo Tharan ஹா ஹா.. அதனால் தானே இந்த உலகம் இயங்குகிறது. இல்லையேல் எல்லோரும் விழித்து விட்டால் இந்த பூமியில் யார் பிறப்பார்..?
Panchalingam Sribalan ஆனால் அவரை பின்பற்றும் பலர் மனைவி,பிள்ளை,வாழ்க்கை,நட்பு ,கோயில்கள் பார்க்கும் ஆசை என்று கவலைகள் பல கொண்டபடி இதையும் எழுதுகின்றனர்!!அறிவாளிகள்தான்!!
Thapo Tharan கிருஷ்ணர் ஒரு துறவியல்ல.. மனைவி மக்களோடு வாழ்ந்த கிரகஸ்த மன்னன். ஆனால் தன்னையும், படைப்பின் ரகசியமும் அறிந்த கவலையில்லாத மன்னன்.
Kokulan Selvanathan இப்படி படைத்ததுவும் அவனே! இது ஒரு தெளிந்த போதை பஞ்ச்
Thapo Tharan பாலாண்ணா.. நீங்களே முடிவெடுத்தால் எப்படி...? கோவில் பார்க்கவிரும்புவதும், மலையேறவிரும்புவதும் கவலையில் அல்ல.. அதற்கு பெயர் ஆவல்.
Kokulan Selvanathan தெரிந்தும் தவறிழைப்பது மனித படைப்பு
Thapo Tharan
இல்லை கோகுலன்.. அது தமோகுணம்..
Panchalingam Sribalan
ஆசைக்கும் ஆவலுக்கும் என்ன வித்தியாசம்!!!பற்றற்றவன் பற்று வைப்பது தவறா சரியா??இது நான் எடுத்த முடிவு அல்ல,சித்தர்களும் சிவனும் சொன்னதுதான்!கோயில்,மலை,மதம்,கொள்கை உறவு எல்லாமே பற்று,ஆசைகள்தான்!!
கற்றபின் நிற்க அதற்குத்தக!!
Thapo Tharan
நிச்சயமாக.. ஒர் துறவி என்று வைத்து கொள்வோம். அவர் நோக்கம் முக்தி என்பது உங்களுக்கு தெரியும். அவர் முக்தியை விரும்பி நோக்குவது ஆசை என்பீர்களா.. அல்லது ஆவல் என்பீர்களா.. ?
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. துறவியாக இருந்தாலும். எல்லாமே துறந்தவர் என்று பொறுள் அல்ல.. அவர் வேறொன்றை நோக்கி போகிறார் என்பதே. ஆகவே அதுவும் ஒரு ஆவலான ஆசையான தேடலே பாலாண்ணா.
குடுத்தோடு வாழ்ந்து கீதையை எழுதியது நான் தவறு என்றால், குடும்பத்தோடு இருந்து ஞானகீதை கூறிய கண்ணனை எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்..?
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. கோவிலும், கயிலை மலையும் அந்த பற்றற்றான் இடம் என்பதை தாங்கள் மறந்தது ஏனோ..?
Jeevitha Rajan ellam viddachchu ippo feeling free..!
Thapo Tharan பாலாண்ணாவோடு சும்மா ஒரு அரட்டை அக்கா.. நாம நம்ம நோக்கத்தில் ஒரு வழிப்பாதை தான்.. உங்களுக்கு தெரியாததா..?
Jeevitha Rajan
Thapo Tharan
வாங்க பாலாபாண்ணா சும்மா பேசுவோம்.. சிவன் சுயம்மாக தோன்றிய யட்சகனாக இரருப்பினும், தட்சாயினி, பார்வதி என்று அடுத்தடுத்து பிறவியெடுத்த ஆதிசக்தியை ஏன் ஏற்றார்.. அவரை துறவியென ஏற்பீர்களா இல்லை கிரகஸ்தன் என ஏற்பீர்ககளா ?
Panchalingam Sribalan
பற்றுக பற்று அற்றவன் பற்றினை!!ஏனெனில் பற்றை விடற்கு!!அதனால்த்தான் பட்டினத்தார் அனைத்து பற்றையும் விட்டு பிச்சைக்காக் ஓடேடுத்துப்புறப்பட்ட்ட போது அன்னையால் நையாண்டி செய்யப்பட்டு அந்த ஓட்டையும் துறந்தார்,அவர் துறவறத்துக்கு காரணம் அவர் வளர்ப்புப்பிள்ளை கொடுத்த காதற்ற ஊசியும் கடிதமும்!!கிறிஸ்ணன் குடும்ப வாழ்வை போதிக்கவில்லை!இறுதி யுத்தத்தில் அழிந்ததில் அவர் படைகளும் அடங்கும்!!அவர் கொன்றதில் அவர் உறவுகளே அநேகர்!!ஆனால் ஒரு சந்தேகம் எட்ட்டாவதாக பிறந்த கண்ணனுக்கு பின்னர் சுபத்திரை என்ற தங்கை வந்த கதை என்ன?பலராமர் பிறப்பால் சொந்த அண்ணன் அல்லவே!!கரு மாறியதாக சொல்லப்பட்டது!!ஆனால் ஆசையை துறத்தலுக்கு உதாரணம் பட்டினத்தார்,குசேலர்,சைவ சித்தர்கள்,முனிவர்கள் போன்றோர்!!இன்றைய சாமிகளோ ஆசாமிகளோ அல்ல!அர்ச்சுனன் ஆசையை துறந்தால் மட்டுமே உறவுகளை கொள்வான் என்பதற்காக கொடுக்கப்பட்ட விளக்கமே கீதை என்றால் அவன் கொல்பவரில் அவன் பெறா மக்கள் கூட அடங்குவர்!எனவே அறிவாளிகள் இழப்புகளை வரவை கண்டு அக்ன்சுவதுமில்லை,மகிழ்வதுமில்லை!கடமையை மட்டுமே செய்வர்!அதனால்த்தான் எம்மதமும் சம்மதம் என்கிறது சித்தாந்தம்!அறிவாளிகள் சித்தர்களுக்கு சமமானவர்!!நாங்கள் அறிவாளிகளா??
சிவன் கிரகஸ்தன் ஆனதால் படும் பாட்டை பார்க்கலையா?கதை தவறாக இருப்பினும்(நமது சைவம் கூறும் கதை வேறு)திருமணம் என்பது பாசவலை,யமனிடம் உள்ளது பாசக்கயிறு!கயிறை அறுக்க முடியாத போது வலையில் வீழ்ந்தால்!!!பாசத்தால்,பார்வதி சிவனைப்படுத்தும் பாட்டை நீங்கள் பார்த்து என்ன எண்ணுகிறீர்கள்!மூன்று காலமும் தெரிந்த சிவனுக்கே சங்கென்றால் மனைவி,பிள்ளை பாசத்தில் பின்னப்பட்டிருக்கும் கிரகஸ்தர் நிலை என்ன??
என் கருத்து அறிவாளி என்பவன் சிவனும் சிவன் வழி சித்தர்களுமே!அவர்களுக்கு ஆசையில்லை!மதம் இல்லை!உலகுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள்!அர்ச்சுனன் சத்திரியன் என்பதால் அந்த தர்மத்தில் நிற்பது அவன் கடமை!அதாவது அவனை நம்பியோருக்காக அவன் போர் செய்தே ஆகவேண்டும்!உமக்கும் அது பொருந்தும்,ஆனால் கடமையை செய்யவேண்டும்,காதலுடன் செய்யக்கூடாது!!முடிந்தால் நீரும் அறிவாளிதான்!மலைக்கு கோயிலுக்கு போவது இறைவனை தேடியாக இருக்க வேண்டும்!நண்பரை தேடியல்ல!பர்த்துவிட்டு வர அவர் என்ன சேர்கஸ் வித்தையா காட்டுகிறார்!
தபோ எங்கே ஆளைக்காணோம்!!சும்மா உம்மை தூண்டிப்பார்த்தேன்,விரித்தவலைக்குள்வந்தீர்!மீண்டும் சென்று விட்டீரே!!நான் எழுதியது கண்ணனின் இந்தக்கருத்துக்கு ஒத்ததல்ல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக