1.தினமும் காட்ல மேட்ல ஏரிக்கரைல தெருமுக்குல மலைமேல நின்னு சோகமா எங்கயோ பாக்குறாப்ல போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு பயமுறுத்துவாங்க! பாவம் என்ன பிரச்சனையோ!
2.அடிக்கடி நிறைய... சோகமான கவிதைகள் எழுதி ஃபீல்பண்ணிக்குவாங்க , இல்லாட்டி யூடியூப்ல ராஜாசார் பாட்டு போட்டு ஃபீல்பண்ணிப்பாங்க.. ஆனா புரியறாப்ல ஃபீல் பண்ணமாட்டாங்க!
3.மொத்தமா இருக்குறதே பத்து பதினைஞ்சு பேர்தான்.. ஒன்.. டூ... த்ரீ.. இல்ல இல்ல எட்டுபேர்தான்..
4.எப்பப்பாரு அவங்களுக்குள்ளயே சண்டை போட்டு திட்டிப்பாங்க... அது சிலசமயம் திட்டமிட்ட திட்டாவும் இருக்கும்.
5.எல்லாருமே எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,சிறுகத
6.எங்க போனாலும் குழுவா போவாங்க கும்மி அடிப்பாங்க.. போறதும் தெரியாது அடிக்கறதும் தெரியாது ஆனா சேதாரம் மட்டும் பலமா இருக்கும்.
6.இவங்களுக்கு பெண்களை விட ஆண்கள் ஆதரவு அல்லது லைக்குகள்தான் அதிகம்!
7.முக்கியமா இவங்க யாரும் தலைக்கு எண்ணெய்வச்சு சீவமாட்டாங்க!
8.ஒருத்தருக்கொருத்தர் போடற ஸ்டேடஸ லைக் ஷேர் கூட பண்ணிக்கமாட்டாங்க..
9.ஒரு செய்தில நாம நினைச்சே பார்க்க முடியாத ஆங்கிள்ல ஒரு கருத்தை சொல்லி பேஜார் பண்ணுவாங்க
கடைசியா...
10.இவங்க எல்லாரும் ரொம்ப்ப்ப நல்லவங்களா இருப்பாங்க! ஏன்னு தெரியுமா..
அவங்க எல்லாருமே அதிஷாவோட க்ளோஸ் ப்ரண்ட்ஸ்!
***
இப்பதிவு யார்மனதையும் புண்படுத்த அல்ல. இக்கட்டுரையில் வரும் அனைத்தும் கற்பனையேனு சொன்னா நம்பவா போறீங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக