சிவன்
---------
சிவன் என்ற சொல்லுக்கு மந்திரம் அல்லது மங்களம் என்று பொருள்.
ஜீவன் (மனிதன் )சிவனாக (கடவுளாக )முடியும் . ஆசைகளை வேரறுத்தால் இந்த நிலையை அடையலாம் .
சிவபக்தனின் சின்னம் திருநீறு .சாம்பல் போன்ற இது மனித வாழ்வின் நிலையாமையைக் குறிக்கிறது.
சிவலிங்கம் என்பது சிவபெருமானின் ஜோதி வடிவமாகும் .மேலுள்ள பானம் ஆணையும் கீழுள்ள
ஆவுடையார் பீடம் பெண்ணையும் குறிக்கும்.இதுவிய உலகைபடைக்கும் வடிவமாகும்.
சிவனின் வாகனம் ரிஷபம்.'ரிஷபம் என்றால் காமம் என்ற பொருள் உண்டு. சிவன் காமனை அடக்கியவர்.அதாவது ஆசைகளி அடக்கியவர் என்ற பொருள் உண்டு.
சிவனை "திரியம்பகன் "என்பர்.அம்பகம் என்றால் "கண் ". சிவனுக்கு அக்னி,சோம,சந்திரன் என்ற கண்கள் உண்டு.
பிரதோஷம் என்ற சொல்லுக்கு "இரவுக்கு முந்தைய நேரம்" என்று அர்த்தம் பாற்கடலை கடைந்த தினம் சனிக்கிழமை என்பதால் சனி பிரதோஷம் முக்கியத்துவம் பெறுகிறது.
வானம் நமக்கு தந்தை ,பூமி நமக்கு அன்னை இதற்க்கு அதிபதி சிவன் . எனவே அவரை அர்த்தநாரீஸ்வரர் என்பர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக