தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வாஸ்து -தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்!!

தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
------------------------------------------------------------ 
வாஸ்து நாள் அன்று கட்டிடம் ஆரம்பிக்க வேண்டும். அந்த நாளுக்கு எந்த தோசமும் கிடையாது.
ஆனி, புரட்டாசி,மார்கழி,பங்குனி மாதத்தில் கட்டிடத்திற்கு அடிகோலக்கூடாது.

ஜென்ம நட்சத்திரத்தில் விவாகம் கூடாது .முடி இறக்க கூடாது.

ஆடி,புரட்டாசி,மார்கழி தவிர இதர மாதங்களில் விவாகம் நடத்த வேண்டும்

அக்னி நாளான சித்திரை 21ம் தேதி முதல் வைகாசி 15 வரையிலான நாட்களில் எந்த சுபகாரியங்களும் செய்யக்கூடாது.

சந்திராஷ்டம தினங்களில் கவனமாக இருக்க வேண்டும்.வாக்கு வாதம் கூடாது .

அஷ்டமி, நவமி திதிகளில் எந்த காரியமும் தொடங்க கூடாது .

பிரதோஷ தினத்தன்று பிற்பகல் 4.30-6.00 மணிக்குள் சிவதரிசனம் செய்வது நல்லது

144 பிரதோஷங்கள் இடைவிடாது சிவதரிசனம் செய்து வருபவர்களுக்கு மறு பிறவி கிடையாது

அதிகாலை 4.30-5.30 மணிக்குள் எழுந்து நம் மூதாதையர்களை நினைத்து வணங்கினால் துன்பங்கள் விலகும்.பாக்கியம் சேரும்.

குடி புக வேண்டிய மாதங்கள் :சித்திரை, வைகாசி,ஆனி ,ஆவணி ,ஐப்பசி ,கார்த்திகை .தை,மாசி,

நவகிரக காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் தேடி வரும்

திதிகளும் நட்சத்திரங்களும் முடிவுறும் நேரம் தான் கலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது .

சந்திராஷ்டமம் பற்றிய ஒரு முக்கிய விளக்கம்

சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின் படி சந்திரன் மனதை கட்டுப்படுத்தி,
அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரன்.எப்பொழுதெல்லாம் அவர் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஜாதகருக்கு அறிவுத்திறனும், மனோ பலமும் என மிக புராதனமான
ஜோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளன .ஆகவே சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகைய நேரங்களில் முக்கிய விஷயங்களில் தவறான முடிவுகளை எடுப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன எனவே முக்கிய முடிவுகளையும் ஆலோசனைகளையும் சந்திராஷ்டம தினங்களில் சமந்தப்பட்ட ராசியினர் தவிர்ப்பது அவசியம்.இதற்க்கு எவரும் விதிவிலக்கல்ல.மேலும் சந்திராஷ்டம தினத்திற்கு முந்தைய நாளும் ,பிந்தைய நாளும் சேர்த்து ஆக மொத்தம் மூன்று நாட்கள் கவனமாக இருக்கவேண்டும். யாரிடமும் அதிகமாக வாக்கு வாதம் செய்யக்கூடாது. சந்திராஷ்டம தினங்களில் முக்கிய முடிவுகளையும் சுபநிகழ்ச்சிகளையும்
சமந்தப்பட்ட ராசியினர் தவிர்ப்பது நலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக