தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 ஏப்ரல், 2013

வீர பெண்மணி " ராணி சென்னம்மா "


ஆங்கிலேயனின் தலையை வெட்டி ஈட்டி முனையில் தூக்கி பிடித்த வீர பெண்மணி " ராணி சென்னம்மா " போற்றுவோம் !!

கிட்டூர் சமஸ்தானத்தின் அரசர் மல்லச ராஜாவிற்கு இரண்டாவுது மனைவியாக வைத்தார் ராணி சென்னம்மா. இவர் காகட்டி சமஸ்தான இளவரசி.

மல்லச ராஜ 1816ம் ஆண்டு இயற்கை எய்திய பிறகு இவர்தம் முதல் மனைவியின் மகன் பதவி ஏற்றான். ஆனால் ராணி சென்னமாவே ஆட்சி பொறுப்பை திறம்பட கவனித்து வந்தார் . இவர் வீரம், அறிவு , நிர்வாகத் திறமை என்று அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.

அரசப் பதவியில் இருந்த சிவலிங்க ருத்ர சர்ஜாவிற்கு குழந்தைகள் இல்லாததால் சிவலிங்கப்ப என்ற ஒரு சிறுவனை தத்து எடுத்தார். ஆங்கிலேயர்கள் இதை செல்லாது என்றும் தங்களிடம் அனுமதி பெற என்றும் ஆணை இட்டனர். இதுதான் அடாவடித்தனம் என்பது. பிழைக்க வந்தவன் நம்மிடம் அதிகாரம் செய்வது என்ன அநியாயம்.

நேரே அரண்மனை சென்ற வெள்ளை காரன் தான் கூறுவது போல் தான் அரண்மனை காரியங்கள் நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். ஆனால் ராணி சென்னம்மா சொல்லியது போல் யாரும் ஆங்கிலேயன் பேச்சை கேட்கவில்லை. இதை அறிந்த அந்த ஆங்கிலேயன் கட்கரே 100 படை வீரர்களை அனுப்பி கிட்டூர் தளபதிகளை கைது செய்து வரசொன்னான் .ஆனால் அவன் அனுப்பிய சிப்பாய்கள் பல பேர் கொள்ள பட்டனர் மீதி உள்ளோர் சிறை பிடிக்க பட்டனர். வெகுண்டான் வெள்ளையன் கோட்டையை முற்றுகை இட்டான். அரை மணி நேரத்தில் கோட்டை கதவு திறக்க வில்லை என்றால் பீரேங்கி கொண்டு தாக்குவோம் என்றான். நேரம் கழிந்தது கதவு திறக்க படவில்லை. ஆங்கிலேய பீரேங்கிகளால் கதவுகள் திறக்க பட முடியவில்லை.ராணி சென்னமாவின் உத்தரவு படி கிட்டூர் வீரர்களே கதவை தகர்த்து வெள்ளையர்கள் மேல் வெறி கொண்டு தாக்கினர்.
ராணி சென்னம்மாவின் வலக்கரத்தில் வாழ் மின்னியது, இடது தொழில் வில்லும், அம்பறாத் துணியும், இடும்பில் தங்கபட்டை அதில் ஒரு பக்கம் துப்பாக்கி, மறு புறம் கூரிய வீச்சு வாள்.

மகிஷாசருவதம் துர்கையாக நின்றால் ராணி சென்னம்மா.

கோட்டைக்கு வெளியே பீரிங்ககளுடன் நின்ற ஆங்கிலேய சிப்பாய்களின் தலை துண்டாடப்பட்டது. ஆங்கிலேய சிப்பாய்கல் பயந்து தலை தெறிக்க ஓடினர் நம் வீரர்களின் வெறித தாக்குதலை கண்டு தாக்ரே குதிரை மீது ஏறி ராணி சென்னமாவை துப்பாக்கியால் சுட வைத்தான் அதை பார்த்த ராணியின் மெய்காவலர் தாக்ரேயை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். கிட்டூர் வீரன் ஒருவன் தாக்ரேயின் தலையை ஈட்டி முனையில் தூக்கி பிடித்து கயவன் அழிந்தான் என்று கூசமிட்டான். போரில் தோற்ற ஆங்கிலேய சிப்பாய்கள் சிறை பிடிக்க பட்டனர்.

ராணி சென்னமாவின் வீரம் இந்த கால நம் பெண்களிலும் புகுந்து அவர்களும் அதர்மத்தை எதிர்க்க துனிவார்களாக ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக