மடையன் = என்பது வயலுக்கு நீர் பாய்ச்சும் போது ஒவ்வொரு பகுதிக்கும் மாற்றிக் கொடுக்கவேண்டும். நீரின் அளவு போதுமானதாக வந்தவுடன். அந்த வாய்க்காலுக்குப் பெயர் மடை என்பதாகும். அப்படி மாற்றி தருவதற்கு ஒரு ஆள் ஊர்ப் பொதுவாக வைத்திருக்கும் வழக்கம் உண்டு. அவருக்குப் பெயர் மடையர் அது தான் மருவி மடையன் ஆனது
இதுவும்… அறிவின்மையைக் குறிப்பதல்ல இவ்வார்த்தை. இது தொழில் முறை காரணப் பெயர்
முட்டாள் = முட்டு+ஆள் அதாவது முட்டு கொடுப்பவர்.
கோவில்களில் உற்சவர் ஊர்வலத்தின் போது தூக்கிவருபவர்களுக்கு ஓய்வு கொடுக்க முட்டுக்கட்டை வைத்துக் கொண்டு சிலர் நான்கு புறமும் வருவர். அவர்களுக்கு வந்த காரணப் பெயர் தான் முட்டாள்.
அறிவின்மையைக் குறிப்பதல்ல இவ்வார்த்தை. இது தொழில் முறை காரணப் பெயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக