தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

அத்திப் பழத்தின் மகத்துவங்கள் !

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமான ஒன்று அத்திப் பழம்.
அத்திப் பழம் அடிமரத்திலேயே கொத்து கொத்தாக காய்க்கும், இப்பழத்தை அப்படியே சாப்பிட முடியாது.
பூச்சிகள் இருப்பதால் பதப்படுத்தி சாப்பிட வேண்டும், இதில் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை பெருமளவில் அடங்கியிருக்கின்றன.
மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. மேலும் இதில் அதிக இரும்புச் சத்தும் உள்ளது.
அத்திப் பழத்தின் மகத்துவங்கள்
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிப்பதுடன் உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
பற்களின் ஈறுகள் சீழ்பிடித்தலோ அல்லது வலித்தாலோ இப்பழத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
இதன் இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும்.
சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்தி பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட மூலநோயைக் குணப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக