தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

udarpayirsiyil(ஃபிட்னஸ்ல்) நீங்க எந்த வகை ஆப்பிளா? பேரிக்காவா? உருளையா? தெரிய வேண்டுமா??

அனைவருமே ஒரே மாதிரியான உடற்பயிற்சியை பின் தொடர முடியாது. ஒவ்வெருவருக்கும் ஒவ்வொரு வகையிலான உடல்வாகு இருக்கும். அதற்கு ஏற்ப உடற்பயிற்சிகள் செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது தான் சிறந்த முறையாகும். அதற்கு ஏற்ப அவர்கள் உடையை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

உடல் வாகு என்று பார்த்தால் ஒருசில வகையாக நாம் அதை பிரிக்க முடியும். ஆப்பிள், பேரிக்காய், உருண்டை, ஹவர் கிளாஸ் போன்ற சில உடலமைப்பு இருப்பதை நாம் பொதுவாக காணலாம்..
ஆப்பிள்
இந்த வகை உடல் வாகு கொண்டவர்களுக்கு மேல் உடல் பெரியதாகவும், கீழ் உடல் சிறியதாகவும் இருக்கும். தோள்பட்டை அகன்று காணப்படும் ஆனால், இடுப்பு பகுதி மிகவும் சிறியதாக காணப்படும் (தோள்பட்டை உடன் ஒப்பிடுகையில்)
ஃபிட்னஸ்
நீங்கள் ஆப்பிள் வகையிலான உடல் வாகு கொண்டவராக இருந்தால், மார்பு, வயிறு மற்றும் கைகள் போன்ற பாகங்களின் மீது ஃபிட்னஸ் செய்ய கவனம் செலுத்த வேண்டும்.
உடை தேர்வு
எடை அதிகமாக உடை தேர்வு செய்வது, ட்ரான்ஸ்பிரன்ட்டாக உடை அணிவது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். இதற்கு பதிலாக பெரிய காலர் கொண்ட ஷர்ட் மற்றும் ஃபிட்டான ஜீன்ஸ் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இது உங்கள் உடல் வாகுக்கு எடுப்பாக இருக்கும்.
பேரிக்காய்
இந்த வகை உடல் வாகு கொண்டவர்களுக்கு மேல் உடல் சிறியதாகவும், கீழ் உடல் பெரியதாகவும் இருக்கும். உங்களு உடலில் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் எடை மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும்.
ஃபிட்னஸ்
நீங்கள் உங்கள் கால்களுக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும். அதே போல உங்கள் மேல் உடல் ஃபிட்னஸ் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் உங்கள் உடல் ஹவர் கிளாஸ் (Hour Glass) போன்ற தோற்றத்திற்கு மாற முயற்சி செய்ய வேண்டும்.
உடை தேர்வு
நீங்கள் உடையை தேர்வு செய்யும் போது டார்க் கலர் கீழாடைகளும், லைட் கலர் மேலாடைகளும் தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு எடுப்பாக தோற்றமளிக்கும்.
உருளை வடிவம்
சிலருக்கு வயிறு மற்றும் மார்பு பகுதி மட்டும் உலகம் போன்று உருண்டையாக இருக்கும். வயிறுக்கு மேலும், கீழும் உடல் பெரியதாக இருக்காது. தோள்பட்டை கூட மிக குறுகியதாக இவர்களுக்கு காட்சியளிக்கும்.
ஃபிட்னஸ்
இந்த வகை உடல்வாகு உள்ளவர்கள் முதலில் உடலில் இருக்கும் மொத்த கொழுப்பையும் குறைக்க முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு இடுப்பு பகுதி. கொழுப்பை குறைத்தபிறகு உடலை எடுப்பாக, ஃபிட்டாக மாற்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
உடை தேர்வு
இந்த வகை உடல் வாகு கொண்டவர்கள் ஷர்ட், பேன்ட் என இரண்டும் ஒரே நிறம் சார்ந்த உடைகளை தேர்வு செய்வது நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹவர் கிளாஸ் (Hour Glass)
இதுப் போன்ற எடுப்பான உடல் வாகு பெற நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இவ்வாறான உடல்வாகு அனைவருக்கும் கிடைப்பது இல்லை
ஃபிட்னஸ்
கொழுப்பு சேராத மாதிரி நீங்கள் பார்த்துக் கொண்டாலே போதுமானது. சராசரியான உடற்பயிற்சிகளை நீங்கள் தினமும் தொடர்ந்து செய்தலே போதும்.
உடை தேர்வு
எந்த வகையான உடைகளை நீங்கள் தேர்வு செய்தாலும் அது உங்களுக்கு பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக