தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

உலகில் இவ்வளவு சொக்க வைக்கும் அழகான இடங்களா?... !

மூங்கில் காடுகள் - ஜப்பான்

தொடர்ந்து பல கிலோ மீட்டர்கள் தூரம் மூங்கில் காடுகள் நடுவே நடந்து போயிருக்கீங்களா? அப்படி ஒரு இடம் நம்ம ஜப்பான்ல இருக்காம் . "சகானோ" எனப்படும் மூங்கில் காடுகள் ஜப்பானின் க்யோடோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைத்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 16 கிலோ மீட்டர்கள். இதனுடைய அழகே காற்றுக்கு அந்த மரங்கள் எழுப்புற சத்தம் தானம்.
கருப்பு காடுகள் - ஜெர்மனி
ஜெர்மனியின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று இந்த கருப்பு காடு. இங்கு உள்ள கூம்பு மரங்கள் மிக அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் சூரிய ஒளி காடுகளின் உள்ளே புகுவது இல்லை. இதன் நீளம் சுமார் 200 கிலோ மீட்டர்கள் ஆகும்.
கனோலா மலர் தோட்டம் - சீனா
கண்ணுக்கு எட்டின தூரம் வரை மஞ்சள் நிற மலர்களுடன் மிளிருகிறது இந்த கனோலா மலர் தோட்டம். இந்த மஞ்சள் நிற பூக்கள் வேற எதுவும் இல்ல, நம்ம கடுகு செடியின் பூ தானாம். இதன் அழகின் காரணாமாக நிறைய ஷூட்டிங் இங்க எடுகப்படுகிரதாம். இதன் சீசன் காலம் பிப்ரவரி முதல் மார்ச் வரையில் தானாம்.
லாவெண்டர் மலர் தோட்டம் - பிரான்ஸ்
லாவெண்டர் மலர் தோட்டத்தினை நிறைய பாடலில் பாத்திருப்போம். இந்த தோட்டம் அழகிற்காக மட்டும் இல்லாம இங்க கிடைக்குற லாவெண்டர் மலர்களைக்கொண்டு பூச்சிக்கடி மற்றும் தீக்காயங்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுதுகிறார்களாம்.
காதல் சுரங்கப்பாதை - உக்ரைன்
படப்பெயர் மாதுரி தோன்றும். ஒரு பழங்கால ரயில் வழித்தடம் முழுவதும் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து ஒரு சுரங்கப்பாதை போன்று தோற்றம் அளிக்கின்றது. பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்து நிறைய காதல் ஜோடிகள் இங்கே சுற்றிப்பார்க்க வருவதனால் இதனை "காதல் சுரங்கப்பாதை" என்றும் அழைக்கின்றனர்.
- See more at: http://www.manithan.com/news/20160421119644#sthash.iKyaEeWA.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக