தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 11, 2016

மத சம்பிரதாயமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் தெளிவற்ற மக்களும்!


ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார், அவர் ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார்.. அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது.. அந்த செடி வளர்ந்து வரும் வேளையில் அந்த பக்கமாக வரும் ஆடு, மாடு கோழி போன்றவை அந்த செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம் செய்து கொன்டிருந்தன.. இதை கண்ட அந்த பெரியவர் அந்த செடியை பாதுகாக்க என்னி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில முள் வேலிகளை போட்டு வைத்தார்.. ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள் இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக வளர்ந்து வந்தது.. இப்போது ஆடு, மாடு, கோழிகளால அந்த செடிக்கு ஆபத்து இல்லை.. சிறிது காலம் சென்றது அந்த பெரியவர் இறந்து விட்டார்.. பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த செடியை பார்த்தான் தன் தந்தை ஆசையாக வளர்த்த செடி ஆயிற்றே என்று அவனும் ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான்.. சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான் பிறகு அவனுடைய மகன் வந்து இது, என் தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும் வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான்.. இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்த செடியை வளர்த்து வருகிறோம்.. ஆனால் உண்மையில் நடந்தது அந்த ரோஜா செடி பெரியவர் காலத்திலேயே பட்டுப்போய் விட்டது, இப்போது அவர்கள் செடி என்று வளர்ப்பதெல்லாம் அதை சுற்றி இருந்த முள் வேலிகளையே.. அன்பு நண்பர்களே .. இதே போலத்தான் பெரியவர்கள் மதம் என்று ஒன்று உருவாக்கியது மனிதனை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, அந்த மதம் அழியாமல் இருக்க முள் வேலி போன்று மதத்திற்க்கு சில சம்பிரதாய சடங்குகளை விதித்தனர்.. ஆதியில் மதத்தை கடைபிடித்த மனிதன் இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் சம்பிரதாய சடங்குகளையே மதம் என்று என்னி கடைபிடிக்க ஆரம்பித்து விட்டான்.. இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் உண்மையை பின்பற்றுவோர் வெகுசிலரே..

தந்தவர்
தாவடி DJ(by facebook)

No comments:

Post a Comment