தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்?.. அதுல இவ்வளவு பிரச்சினை இருக்குதாம்...

மிக உயரமான, ஸ்பிரிங் போல ஏறி இறங்கும் தன்மையுள்ள தலையணைகளைப் பயன்படுத்துவதால் கழுத்து எலும்பு தேய்மானம், நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டத் தடை, மூளை பாதிப்பு போன்றவை ஏற்படுவதாக நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சொல்கின்றன.

‘தலையணை இல்லாமல் என்னால் உறங்கவே முடியாது’ என்பவர்கள், அதிக பாதிப்பை விளைவிக்கக்கூடிய மெல்லிய, மிருதுவான, ஸ்பிரிங் தன்மையுள்ள தலையணை பயன்பாட்டை தவிர்த்து ‘குறைவான பாதிப்பைத் தரும்’ தடிமனான தலையணையை பயன்படுத்தலாம்.
இவை, அதிக உயரம் இல்லாமல், சின்னதாகவும், இயற்கையான பொருட்களால் ஆனதாகவும் இருக்க வேண்டும். தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.
நம் தலைமுறையினர் தலையணைக்கு அடிமையாகிவிட்டோம். அதனால், முடிந்தவரை தலையணை பயன்படுத்துவதை குறைத்து, தலையணை இல்லாமல் சமமான தரையில். இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி உறங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக