தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 3, 2016

திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு!


ஈழவள நாட்டின் தலைநகராம் திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

சோழ காலத்திய தமிழ் அகர வரிசைகளைத் தெளிவாகக் காண்பிக்கும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கல் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கட்டப்படும் கிரிக்கெட் விளையாட்டரங்குக்காக நிலத்தைத் தோண்டியபோதே இக்கற்பாளம் எடுக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்குச் செல்லும் கோணேஸ்வரம் சாலையின் வலது பக்கத்தில் உள்ள பாதையின் ஒரு பகுதியாகவுள்ள நிலத்தில், அதேநேரம் கோணேஸ்வரர் தீர்த்தமாடச் செல்லும் பகுதிக்கு அருகில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பட்ட காலத்தில் மேற்படி இடத்தில் சங்கமித்த பௌத்த ஓய்வுநிலையம் ஒன்றும் பௌத்த விகாரை ஒன்றும் கட்டப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மேற்படி கற்பாளத்தை திருகோணமலை போலீசார் எடுத்துச் சென்று, தற்போது கொழும்பிலுள்ள தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இந்தக் கற்பாளத்தின் பாதுகாப்புக் குறித்துக் கவலை எழும்பியுள்ளது. ஏனெனில் கொழும்பு தொல்பொருள் ஆய்வுத்துறையில் தமிழ் அதிகாரிகள் எவருமே இல்லை என்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment